பதிவு செய்த நாள்
12 நவ2012
01:27
குன்னூர்: நடப்பு 2012ம் காலாண்டர் ஆண்டில், செப்டம்பர் மாதம் வரையிலுமாக, சர்வதேச கறுப்பு தேயிலை உற்பத்தி, 143 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில்,மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (147 கோடி கிலோ) விட, 2.85 சதவீதம் குறைவாகும் என, சர்வதேச தேயிலை வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர்.மதிப்பீட்டு காலத்தில், கென்யாவின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 1.19 கோடி கிலோ குறைந்து, 24.79 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. இந்தியாவின், கறுப்பு தேயிலை உற்பத்தி, 1.04 கோடி கிலோ குறைந்து, 77.26 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.உகண்டாவில், இதன் உற்பத்தி, 89.80 லட்சம் குறைந்து, 2.20 கோடி கிலோவாகவும், இந்தோனேஷியாவின் உற்பத்தி, 63 லட்சம் கிலோ குறைந்து, 4.02 கோடி கிலோவாகவும் குறைந்துஉள்ளன.இலங்கையில் கறுப்பு தேயிலை உற்பத்தி, 34 லட்சம் கிலோ சரிவுஅடைந்து, 24.17 கோடி கிலோவாகவும், மாலதீவு உற்பத்தி, 15 லட்சம் கிலோ குறைந்து, 3.56 கோடி கிலோவாகவும் குறைந்துள்ளன.அதேசமயம், வங்கதேசத்தில் மட்டும், கறுப்பு தேயிலை உற்பத்தி, 32.50 லட்சம் கிலோ உயர்ந்து, 4.36 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|