பதிவு செய்த நாள்
12 நவ2012
01:28

புதுடில்லி: நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் பயன்பாடு, 83 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாத பயன்பாட்டை (76,495 டன்) விட, 9 சதவீதம் அதிகமாகும் என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 3 சதவீதம் குறைந்து, 89,300 டன்னிலிருந்து, 86,300 டன்னாக சரிவடைந்துள்ளது. இதன் இறக்குமதி, இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்து, 8,574 டன்னிலிருந்து, 18,326 டன்னாக அதிகரித்துள்ளது. இயற்கை ரப்பர் ஏற்றுமதி, 63 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,107 டன்னிலிருந்து, 2,981 டன்னாக சரிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 5.84 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 5.51 லட்சம் டன்னாக குறைந்து காணப்பட்டது. மதிப்பீட்டு காலத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 4.80 லட்சம் டன்னிலிருந்து, 4.82 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் இறக்குமதி, 99,760 டன்னிலிருந்து, 1.31 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், இயற்கை ரப்பர் ஏற்றுமதி, 21,064 டன்னிலிருந்து, 8,573 டன்னாக சரிவடைந்துள்ளது.சென்ற அக்டோபர் மாதம் வரையிலுமாக, நாட்டின், இயற்கை ரப்பர் கையிருப்பு, 2.45 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|