பதிவு செய்த நாள்
12 நவ2012
01:29

புதுடில்லி: மத்திய அரசு, உள்நாட்டில் விலை உயர்வைத் தடுத்து, உபரி கையிருப்பை குறைக்கும் வகையில், 65 லட்சம் டன் கோதுமையை, ஆலைகள் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.இதுதவிர, நாபெட், என்.சி.சி.எப்., மற்றும் கேந்திரிய பந்தர் ஆகிய அமைப்புகள் மூலம், கூடுதலாக, தலா, 5 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமையை சில்லறை விற்பனைக்கு அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு வழங்கியுள்ளது.உள்நாட்டு மொத்த விற்பனை சந்தையில், சில்லறை விலையில், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை, 21 ரூபாயாக உள்ளது. அதேசமயம், இதற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, 12.85 ரூபாயாக உள்ளது.சென்ற 2011-12ம் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் கோதுமை உற்பத்தி,
9.39 கோடி டன் என்ற அளவில் அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக, மத்திய அரசின், கோதுமை கொள்முதல், முன் எப்போதும் இல்லாத அளவாக, 3.81 கோடி டன் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.நடப்பாண்டு அக்டோபர் வரையிலான காலத்தில், மத்திய அரசின் தொகுப்பில், 4.05 கோடி டன் கோதுமை கையிருப்பு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|