பதிவு செய்த நாள்
12 நவ2012
01:32

ஆண்டிபட்டி: உற்பத்தி குறைவால், ஆண்டிபட்டி பகுதியில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.ஆண்டிபட்டி சித்தயகவுண்டன்பட்டி, ஏத்தக்கோயில், சித்தார்பட்டி, பாலக்கோம்பை, ராஜதானி, சேவாநிலையம், தெப்பம்பட்டி கிராமங்களில் வெங்காய சாகுபடி நடக்கிறது. கடந்த ஆண்டு, விளைச்சல் குறைந்து, விலை அதிகரித்தது. இதையடுத்து, அதிக விலை கிடைக்கும் என, விவசாயிகள், அடுத்த பருவத்தில், வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டினர். இதைஅடுத்து, அபரிமிதமான உற்பத்தியால், தேக்கம் ஏற்பட்டு விலை சரிந்தது. நடப்பு பருவத்தில், வெங்காய சாகுபடி எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. சில மாதங்களுக்கு முன், நடவு செய்யப்பட்ட பயிர், பலன் தரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்டது.இப்பகுதியில், தினமும், 10 ஆயிரம் கிலோ வெங்காயம் உற்பத்தியாகும். தற்போது, 1,500 கிலோவாக குறைந்துள்ளது. இதனால், இதன் விலை உயர்ந்துள்ளது. ஆண்டிபட்டி பகுதியில், ஒரு கிலோ வெங்காயம், 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|