நாட்டின் ஏற்றுமதி ரூ.1.27 லட்சம் கோடிநாட்டின் ஏற்றுமதி ரூ.1.27 லட்சம் கோடி ... இந்திய கோழிகளுக்கு ஓமன் நாட்டில் தடை இந்திய கோழிகளுக்கு ஓமன் நாட்டில் தடை ...
தொழில் துறை உற்பத்தி மைனஸ் 0.4 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2012
02:14

புதுடில்லி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில், மைனஸ் 0.4 சதவீதமாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டின், இதே மாதத்தில், தொழில் துறை உற்பத்தி, 2.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது. சென்ற செப்டம்பர் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி பின்னடைவை கண்டுள்ளது என்றாலும், முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், இதன் வளர்ச்சி, 2.3 சதவீதமாக சற்று அதிகரித்து காணப்பட்டது என, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2012 - 13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 5.1 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐ.ஐ.பி.,) கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 75 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சென்ற செப்டம்பர் மாதத்தில், இத்துறையின், உற்பத்தி மைனஸ், 1.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டின், இதே மாதத்தில், தயாரிப்பு துறையின் வளர்ச்சி, 3.1 சதவீதமாக இருந்தது. சென்ற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி, மைனஸ் 0.4 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5.5 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.சென்ற செப்டம்பர் மாதத்தில், பொறியியல் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 12.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், மைனஸ் 6.5 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது.பொறியியல் துறையின் உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், மைனஸ் 13.7 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.நடப்பாண்டு, செப்டம்பர் மாதத்தில், சுரங்க துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5.5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், மைனஸ் 7.5 சதவீதம் என்ற அளவில் பின்னடவை கண்டிருந்தது.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், சுரங்க துறையின் உற்பத்தி, எவ்வித மாறுதலும் இன்றி பூஜ்ஜியமாக உள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், மைனஸ் 1.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.சென்ற செப்டம்பர் மாதத்தில், நுகர்பொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 0.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 5.7 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டிருந்தது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நுகர்பொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2.5 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 4.7 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 1.7 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 8.9 சதவீதமாக மிகவும் உயர்ந்து காணப்பட்டது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.8 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 5.3 சதவீதமாக இருந்தது.சென்ற செப்டம்பர் மாதத்தில், அடிப்படை பொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.5 சதவீதமாக உள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 5.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது. நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 7.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது.நடப்பாண்டு, செப்டம்பர் மாதத்தில், மின்சார துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டின், இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 9 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், மின்சார துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 9.4 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)