மிளகு ஏற்றுமதியில் இந்தியா பின்னடைவுமிளகு ஏற்றுமதியில் இந்தியா பின்னடைவு ... நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,700 கோடி நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,700 கோடி ...
சர்வதேச மந்த நிலையால் காபி ஏற்றுமதியில் சரிவு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2012
00:39

கொச்சி: நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இது வரையிலுமாக, நாட்டின் காபி ஏற்றுமதி, 10 சதவீதம் சரிவடைந்து, 1.87 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, உற்பத்தி அதிகரிப்பு மற்றும் காபி விலை சரிவு போன்றவையே ஏற்றுமதி குறைந்து போனதற்கு முக்கிய காரணம்.குறிப்பாக, காபி அதிகம் விளையும், பிரேசில், கொலம்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில், இதன் விளைச்சல் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில், காபி விலை குறைந்துள்ளது.
மேலும், இந்தியாவிலிருந்து, காபியை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்ளும், ஐரோப்பிய நாடுகளில், இன்னும் முழுமையான அளவில், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால், இந்திய காபி ஏற்றுமதி வெகுவாக குறைந்து போயுள்ளது என, இந்திய காபி ஏற்றுமதி கூட்டமைப்பின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வரும் 2013ம் ஆண்டில், உலகளவில் காபி உற்பத்தி, 9 சதவீதம் அதிகரிக்கும் என, சர்வதேச காபி கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.சர்வதேச அளவில், காபி விலை சரிவடைந்து வருவதை எடுத்துக் காட்டும் விதமாக, நியூயார்க் முன்பேர வர்த்தக சந்தையில், 2.20 டாலராக இருந்த, ஒரு பவுண்டு அராபிகா காபி, தற்போது, 4.6 சதவீதம் சரிவடைந்து, 1.46 டாலராக குறைந்து உள்ளது.இதே போன்று, லண்டன் சந்தையில், நடப்பாண்டு தொடக்கத்தில், 2,200 டாலராக அதிகரித்து காணப்பட்ட, ஒரு டன் ரோபஸ்டா காபி விலை, தற்போது, 1,877 டாலராக குறைந்து போயுள்ளது.இந்திய காபி வாரியம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 3.25 லட்சம் டன் காபி உற்பத்தியாகும் என, மதிப்பிட்டுள்ளது. இதில், ரோபஸ்டா வகை காபி உற்பத்தி, 2.21 லட்சம் டன்னாகவும், அராபிகா வகை காபி உற்பத்தி, 1.04 லட்சம் டன்னாகவும் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மேற்கண்ட மதிப்பீட்டை விட, குறைவான அளவே காபி உற்பத்தியாகும் என, இதன் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, நடப்பு நிதியாண்டில், காபி உற்பத்தி 3 லட்சம் டன் அளவிற்கே இருக்கும். இதில், ரோபஸ்டா வகை காபியின் பங்களிப்பு, 2.10 லட்சம் டன் என்ற அளவிலும், அராபிகா வகை காபியின் பங்களிப்பு, 90 ஆயிரம் டன் என்ற அளவிலும் இருக்குமென, மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.சென்ற ஆண்டு, அராபிகா வகை காபியின் விலை, சர்வதேச அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதனால், நுகர்வோர்கள், மலிவு விலை ரோபஸ்டா வகை காபி பயன்பாட்டிற்கு மாறினர்.நடப்பு ஆண்டில், வியட்நாம் நாட்டில், ரோபஸ்டா காபி உற்பத்தி, முன் எப்போதும் இல்லாத வகையில், 2.50 கோடி மூட்டைகளாக (ஒரு மூட்டை= 60 கிலோ) அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, உலகளவில், ரோபஸ்டா காபி விலை மேலும் சரிவடையக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)