தேயிலை உற்பத்தி பாதிப்புதேயிலை உற்பத்தி பாதிப்பு ... வெளிச்சந்தை விற்பனைக்கு 30 லட்சம் டன் கோதுமை: இந்திய உணவு கழகம் முடிவு வெளிச்சந்தை விற்பனைக்கு 30 லட்சம் டன் கோதுமை: இந்திய உணவு கழகம் முடிவு ...
கறிக்கோழி விலை வரலாறு காணாத வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2012
07:05

நாமக்கல்: தமிழகத்தில், கோவை, பல்லடம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், கறிக்கோழிப் பண்ணைகள் அதிகமாக உள்ளன. அங்கிருந்து நாள்தோறும், மூன்று லட்சம் கறிக்கோழிகள், கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. குளிர்கால சீசன் துவக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கறிக்கோழி நுகர்வு அதிகரிக்கத் துவங்கிஉள்ளது.இதன் காரணமாக, அக்டோபர், 21ம் தேதி நிலவரப்படி, ஒரு கிலோ கறிக்கோழி, 62 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின், கறிக்கோழி விலை படிப்படியாக குறையத் துவங்கியது. அதே மாதம், 27ம் தேதி, ஒரு கிலோ கறிக்கோழி, 57 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.இச்சூழலில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் குறித்த தகவல் சென்ற மாத இறுதியில் வெளியானது. இதன் எதிரொலியாக கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின், முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு, கேரள அரசு தடைவிதித்தது. இத்தடை, ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்தது.

இதனால், லட்சக்கணக்கான கறிக் கோழிகள், விற்பனைக்கு செல்லாமல் தேக்கமடைந்தன. இதன் எதிரொலியாக, கறிக் கோழி விலை கடும் சரிவை சந்திக்கும் நிலை உருவானது. இதன்படி, நவம்பர், 1ம் தேதி, ஒரு கிலோ கறிக்கோழி விலை, ஏழு ரூபாய் சரிந்து, 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் இந்த விலை, @மலும் சரிவடைந்தது.நவம்பர், 15ம் தேதி நிலவரப்படி, ஒரு கிலோ கறிக்கோழி, 37 ரூபாய் என்ற வரலாறு காணாத விலைச் சரிவை சந்தித்து உள்ளது. உற்பத்தி மிகுதி மற்றும் தேக்கம் உள்ளிட்ட காரணங்களால், கறிக்கோழி விலை, மேலும் சரிய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து கறிக்கோழி விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ கறிக்கோழி, 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, கறிக்கோழி விலை குறைப்பு செய்துள்ளதால் சில்லரை வியாபாரத்தில் அதன் விலை குறையும். அதன் மூலம் நுகர்வோர் பலன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.இதனிடை@ய, முட்டைகள் @தங்கு வதை தவிர்க்க, அதன் விலையும் குறைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், தமிழகம், கேரளாவில், 315 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலையில்,

15 காசு குறைத்து, 300 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில் முட்டை விலை, 30 காசு சரிந்திருப்பது கோழிப் பண்ணையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)