பதிவு செய்த நாள்
19 நவ2012
16:37

உலக அளவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ஆப்பிரிக்க வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவைச் சேரந்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தென் ஆசிய நாடுகளான இந்தியா, சிரிலங்கா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருக்கும் போது அவர்களுக்கு வரும் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணத்தை ரத்து செய்திருக்கிறது. இதனால் தென் ஆசிய நாடுகளில் பயணம் செய்யும் ஆப்பிரிக்க ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரோமிங் கட்டணம் இல்லாமலே வரும் அழைப்புகளை எடுத்து பேசலாம். மேலும் இந்த சலுகையை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 17 நாடுகளுக்கு ஏர்டெல் வழங்கி இருக்கிறது. இந்த சலுகையை ஏர்டெல் தானாகவே வழங்குவதால் ஆப்பிரிக் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தென் ஆசியா வரும் போது புதிய சிம் கார்டுகளை வாங்க அவசியம் இல்லை. இதன் மூலம் ஆப்பிரிக்க வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த இருக்கிறது ஏர்டெல்.எல்லைகள் தாண்டி குறைந்த விலையில் நிறைந்த தொலைத் தொடர்பு சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதே ஏர்டெல்லின் நோக்கம் என்று ஆப்பிரிக்காவிற்கான ஏர்டெல் விற்பனை அலுவலர் ஆன்ட்ரே பேயர்ஸ் கூறியிருக்கிறார். இந்த சலுகை பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|