பதிவு செய்த நாள்
25 நவ2012
07:31

புதுடில்லி: பொது துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்கள், கண்டிப்பாக பெட்ரோலில், 5 சதவீத எத்தனாலை கலந்து விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ.,), ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான அரசாணை வெளியான பின், நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.பெட்ரோலில், 5 சதவீத எத்தனாலை கட்டாயம் கலந்து விற்பனை செய்யும் திட்டத்திற்கு, கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருந்தது.இதன்படி,வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான், நிகோபார், லட்சத்தீவு ஆகியவை நீங்கலாக, 19 மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.இத்திட்டத்தின் கீழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 105 கோடி லிட்டர் எத்தனால் தேவை என, மதிப்பிடப்பட்டது.
இந்நிலையில், சர்க்கரை ஆலைகளுக்கும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் இடையே, எத்தனால் கொள்முதல் விலை தொடர்பான பிரச்னையால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.அதனால், எத்தனால் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுமித்ரா சவுத்ரி தலைமையிலான குழுவை, சி.சி.இ.ஏ., அமைத்தது.இக்குழு, இடைக்கால ஏற்பாடாக, ஒரு லிட்டர் எத்தனால் கொள்முதல் விலையை, 27 ரூபாயாக நிர்ணயித்தது.எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனைக்கு தேர்வு செய்யப்பட்ட, 19 மாநிலங்களில், 13 மாநிலங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.அதிலும், ஆண்டுக்கு, 44 கோடி லிட்டர் எத்தனால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.நிர்ணயித்த இலக்குப்படி, எத்தனாலை கொள்முதல் செய்யாத எண்ணெய் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது.இருந்தபோதிலும், எத்தனால் கலப்பு பிரச்னையில், மத்திய அரசின் தெளிவற்ற போக்கு காரணமாகவே, இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதால், இறக்குமதி செலவினத்தை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றில் ஒன்றாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சி.சி.இ.ஏ.,வின் ஒப்புதலை அடுத்து, பெட்ரோலிய அமைச்சகம், விரைவில் அரசாணை வெளியிட உள்ளது. மேலும், எத்தனால் விலை, கொள்முதல் ஆகியவை தொடர்பான ஒப்பந்த புள்ளிகளும் கோரப்பட உள்ளன.இதையடுத்து, குறிப்பிட்ட மாநிலங்களில் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை நடைமுறைக்கு வரும்.எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையின் வாயிலாக, எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்த முடியும்.
இந்நிலையில், எத்தனால் கலப்பு திட்டத்திற்கு, ரசாயன துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் எத்தனாலை கலப்பதால், பல்வேறு ரசாயன பொருட்களுக்கு தேவையான எத்தனாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும், இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, "கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டில், 220 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டது. மதிப்பீட்டின்படி, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு, 105 கோடி லிட்டர் எத்தனால் தான் தேவைப்படும். அதனால், எத்தனாலுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை' என்று தெரிவித்தார்.அப்படியே பற்றாக்குறை ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்கள், எத்தனாலை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என, அவர் மேலும் கூறினார்.
*பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் இறக்குமதி செலவு குறையும்
*சர்க்கரை ஆலைகள் மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவா# கிடைக்கும்
*எத்தனால் கலந்த பெட்ரோலில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவு
*வாகனங்களுக்கு கூடுதல் மைலேஜ் கிடைக்கும்
*2010-11ம் நிதியாண்டில் 220 @காடி லிட்டர் எத்தனால் உற்பத்தி öŒ#யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|