பெட்ரோலில் 5 சதவீத எத்தனால் கலப்பது கட்டாயமாகிறதுபெட்ரோலில் 5 சதவீத எத்தனால் கலப்பது கட்டாயமாகிறது ... தொலை தொடர்பு துறை 31 சதவீதம் வளர்ச்சி தொலை தொடர்பு துறை 31 சதவீதம் வளர்ச்சி ...
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.24,480க்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2012
07:32

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாறு காணாத வகையில் நேற்று, 24,480 ரூபாயாக உயர்ந்தது.பண்டிகை சீசன் முடிந்த நிலையிலும், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.நேற்று ஒரே நாளில், தங்கம் விலை, கிராமுக்கு, 38 ரூபாய் உயர்ந்து, 3,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 304 ரூபாய் அதிகரித்து, 24,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.24 காரட், 10 கிராம் சுத்த தங்கம் விலை, 410 ரூபாய் அதிகரித்து, 32,730 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 68.50 ரூபாயிலிருந்து, 70.20 ரூபாய்க்கு விற்பøனாயானது.சென்ற வெள்ளிக் கிழமை, தங்கம், கிராமுக்கு, 23 ரூபாய் உயர்ந்து, 3,022 ரூபாய்க்கும், சவரனுக்கு, 184 ரூபாய் அதிகரித்து, 24,176 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 32,320 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரு தினங்களில் மட்டும், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு, 61 ரூபாயும், சவரனுக்கு, 488 ரூபாயும் அதிகரித்துள்ளன. 10 காரட் சுத்த தங்கம் விலை, 660 ரூபாய் உயர்ந்துள்ளது.இதற்கு முன், செப்டம்பர் மாதம் 14ம் தேதி, அதிகபட்சமாக, ஒரு கிராம் தங்கம், 3,041 ரூபாய்க்கும், சவரன், 24,328 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சர்வதேச சந்தையில், கடந்த இரு தினங்களில் மட்டும், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 20 முதல், 30 டாலர் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை அதிகரித்துள்ளது. மேலும், விண்வெளி சாதனங்கள், விமான உதிரி பாகங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில், வெள்ளி பயன்பாடு உயர்ந்துள்ளது. இதனால், வெள்ளியில் முதலீடு மேற்கொள்வதும் அதிகரித்து, அதன் விலை உயர வழி வகுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)