ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் ரூ.6,851 கோடி உயர்வுஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் ரூ.6,851 கோடி உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ...
ஆபரண ஏற்றுமதி ரூ.1.22 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2012
05:15

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, முதல் ஏழு மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 1.22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (1.20 லட்சம் கோடி ரூபாய்) விட, 3.34 சதவீதம் அதிகமாகும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், ஹாங்காங் உள்ளிட்டவை முக்கிய சந்தைகளாகத் திகழ்கின்றன.மதிப்பீட்டு காலத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 111.08 சதவீதம் வளர்ச்சி கண்டு, 23,762 கோடியிலிருந்து, 48,535 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 28.61 சதவீதம் குறைந்து, 69,856 கோடியிலிருந்து, 49,491 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, 12.57 சதவீதம் சரிவடைந்து, 16,711 கோடியிலிருந்து, 19,116 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. வண்ண நவரத்தினங்கள் ஏற்றுமதி, 22 சதவீதம் வளர்ச்சி கண்டு, 768 கோடியிலிருந்து, 930 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 28.54 சதவீதம் அதிகரித்து, 1,786 கோடியிலிருந்து, 2,196 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கச்சா வைரங்கள் ஏற்றுமதி, 0.29 சதவீதம் குறைந்து, 4,621 கோடியிலிருந்து, 4,607 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்த நிலையால், பல நாடுகள் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்நாடுகளில், இந்திய ஆபரணங்களுக்கான தேவைப்பாடு குறைந்துள்ளது.இதன் விளைவாக, சென்ற அக்டோபர் மாதத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 14,475 கோடி ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.

இது, சென்ற நிதியாண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (16,728 கோடி ரூபாய்) விட, 13.47 சதவீதம் குறைவாகும்.கணக்கீட்டு காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 22.72 சதவீதம் குறைந்து, 9,188 கோடியிலிருந்து, 7,101 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.

தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 10.21 சதவீதம் உயர்ந்து, 3,557 கோடியிலிருந்து, 3,920 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.தங்க பதக்கம் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, 16.12 சதவீதம் குறைந்து, 3,082 கோடியிலிருந்து, 2,585 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 61.94 சதவீதம் வளர்ச்சி கண்டு, 180 கோடியிலிருந்து, 292 கோடி ரூபாயாகவும், முத்து ஏற்றுமதி, 33 லட்சத்திலிருந்து, 77 லட்சம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.கச்சா வைரம் ஏற்றுமதி, 24.89 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 703 கோடியிலிருந்து, 528 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)