தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... நாட்டின் பருத்தி உற்பத்தி3.34 கோடி பொதிகளாக இருக்கும் நாட்டின் பருத்தி உற்பத்தி3.34 கோடி பொதிகளாக இருக்கும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆடியின் மிகப்பெரிய கார் ஷோரூம் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2012
16:42

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் மிகப்பெரிய ஆடி கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்கும் சொகுசு கார் நிறுவனங்கள் பிரம்மாண்டமான கார் ஷோரூம்களை திறந்து வருகின்றன.புதுடில்லி அருகே பரீதாபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூமும், கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய வால்வோ ஷோரூமும் சமீபத்தில் திறக்கப்பட்டன. இந்த நிலையில், அகமதாபாத் நகரில் குஜராத்தின் மிகப்பெரிய ஆடி கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. உலக தரத்திற்கு இணையான வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஷோரூமை ஆடி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் மைக்கேல் பெர்ஷகே திறந்து வைத்தார். 22,354 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட ஷோரூமின் முகப்பு ஆடி நிறுவனத்தின் பிரத்யேக ஹனிகோம்ப் அலுமினியம் பேப்ரிகேஷன் டிசைனுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ஷோரூமில் ஒரே நேரத்தில் 12 கார்களை பார்வைக்கு நிறுத்தி வைக்க முடியும்.
ஷோரூமுடன் இணைந்ததாக 18,880 சதுர அடி பரப்பில் சர்வீஸ் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 12 கார்களை சர்வீஸ் செய்யும் வசதி கொண்ட இந்த சர்வீஸ் மையத்தில் நாள் ஒன்றுக்கு 24 கார்களை சர்வீஸ் செய்யலாம் என தகவல்கள் வெளிவருகின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)