பதிவு செய்த நாள்
28 நவ2012
23:57
சென்னை:இந்தியாவில், ஆடி கார் நிறுவனத்துக்கு, மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏற்கனவே, ஏ4, ஏ6 மற்றும் க்யூ5 க்ராஸ் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்தியாவில், ஆடி கார் நிறுவனத்தின், ஆடி க்யூ3, க்யூ5, க்யூ7 எஸ்.யு.வி., ஆகிய மாடல் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நடப்பு ஆண்டின், முதல், பத்து மாதங்களில், இந்த நிறுவனம், இந்தியாவில், 7,273 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 55 சதவீதம் அதிகம்.
இந்த சூழ்நிலையில், க்யூ 7 காரும், அவுரங்காபாத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்திய சந்தையில், ஆண்டுதோறும் ஆயிரம், க்யூ7 கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் தற்போது ஆடி கார் நிறுவனத்தின் சார்பில், ஏ4, ஏ6, ஏ7, ஏ8எல், க்யூ3, க்யூ 5, க்யூ7, எஸ்4, ஆர்எஸ்5 மற்றும் சூப்பர் கார்கள் வரிசை யில் ஆர்8, ஆர்8 ஸ்பைடர் ஆகிய மாடல் கார்கள் விற்பனையாகின்றன. சென்னையில், ஆடி க்யூ7 காரின் எக்ஸ் ஷோரூம் விலை 59.29 லட்சம் ரூபாயாக உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|