முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதம்முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதம் ... கோரப்படாத டிவிடெண்டுதொகை ரூ.21 கோடியாக உயர்வு கோரப்படாத டிவிடெண்டுதொகை ரூ.21 கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன விற்பனையில் மிதமான வளர்ச்சி:சென்ற நவம்பர் மாதத்தில்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:25

சென்னை:சென்ற நவம்பர் மாதத்தில், உள்நாட்டில், வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின், ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவிற்கு, உள்நாட்டில் வாகனங்கள் விற்பனை உயரவில்லை.
சென்ற நவம்பர் மாதத்தில், தீபாவளி பண்டிகையை முன் னிட்டு, உள்நாட்டில், கார் மற்றும் இருசக்கர வாகன விற்பனை சிறப்பாக இருக்குமென, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உள்நாட்டில், இவற்றின் விற்பனை வளர்ச்சி மிதமான அளவிற்கே உயர்ந்துள்ளது.
டி.வி.எஸ். மோட்டார்:சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின், ஒட்டு மொத்த வாகன விற்பனை, சென்ற நவம்பர் மாதத்தில், 2.11 சதவீதம் சரிவடைந்து, 1,71,837 ஆக குறைந்து உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1,75,535 ஆக அதிகரித்து காணப்பட்டது.இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த இருசக்கர வாகன விற்பனை, 3.50 சதவீதம் சரிவடைந்து, 1,72,829 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1,66,783 ஆக குறைந்துள்ளது. மேலும், ஸ்கூட்டர் விற்பனையும், 15.42 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 44,301 லிருந்து, 37,470 ஆக சரிவடைந்துள்ளது.
இருப்பினும், இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை, 4.61 சதவீதம் வளர்ச்சி கண்டு, 62,608 என்ற எண்ணிக்கையிலிருந்து, 65,494 ஆக அதிகரித்து உள்ளது.அதேசமயம், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 1,50,406 லிருந்து, 1,50,056 ஆக சற்று குறைந்துள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில், இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை, 86.77 சதவீதம் என்ற அளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டு, 2,706 என்ற எண்ணிக்கையிலிருந்து, 5,054 ஆக உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகனங்கள் ஏற்றுமதி, 17.27 சதவீதம் குறைந்து, 24,271 லிருந்து, 20,080 ஆக சரிவடைந்துள்ளது.நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை,சென்ற நவம்பர் மாதத்தில், 12.45 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,03,200 ஆக அதிகரித்துள்ளது. இது,கடந்த 2011ம் ஆண்டின் இதே மாதத்தில், 91,772 ஆக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனம், உள்நாட்டில், 90,882 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 82,870 ஆக இருந்தது. ஆக, உள்நாட்டில், கார் விற் பனை, 9.67 சதவீதம் அதிகரித்து உள்ளது.மேலும், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 38.37 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,902 என்ற எண்ணிக்கையிலிருந்து, 12,318 ஆக உயர்ந்துள்ளது.
போர்டு இந்தியா:சென்ற நவம்பரில், போர்டு இந்தியா நிறுவனத்தின், கார் விற்பனை, 10,155 ஆக சற்று அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 10,091 ஆக இருந்தது.இருப்பினும், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 28.57 சதவீதம் சரிவடைந்து, 8,322 என்ற எண்ணிக்கையிலிருந்து, 5,944 ஆக சரிவடைந்துள்ளது.இருப்பினும், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, இருமடங்கு வளர்ச்சி கண்டு, 1,769 லிருந்து, 4,211 ஆக அதிகரித்துள்ளது.
வாகன கடன்:இந்நிலையில், சென்ற அக்டோபர் மாதத்தில், வங்கிகள் வழங்கிய வாகன கடன், 22.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 18 சதவீதம் என்ற அளவில் இருந்தது.பல வங்கிகள், மோட்டார் வாகன கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இதனால், மோட்டார் வாகன கடன் அதிகரித்ததாக வங்கி துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)