வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்: அசோசெம் வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்: அசோசெம் ... தக்காளி வரத்து குறைவு கிலோ ரூ.30க்கு உயரும் தக்காளி வரத்து குறைவு கிலோ ரூ.30க்கு உயரும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
தள்ளாட்டத்தில் உள்நாட்டு வாகன விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2012
00:21

சென்னை:வங்கிகள், வாகன கடனுக்கான வட்டியை வெகுவாக குறைத்துள்ள போதிலும், வாகன விற்பனை சிறப்பாக இல்லை.சென்ற நவம்பர் மாதம் ஒரு சில வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஹுண்டாய் மோட்டார் இந்தியாமதிப்பீட்டு மாதத்தில், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை, 2.29 சதவீதம் குறைந்து, 55,762 ஆக சரிவடைந்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 57,071 ஆக அதிகரித்து காணப்பட்டது. மேலும், உள்நாட்டு சந்தையில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 35 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 34,751 ஆக சற்று குறைந்துள்ளது.இது தவிர, இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும், 4.80 சதவீதம் குறைந்து, 22,071ல் இருந்து, 21,011 ஆக சரிவடைந்துள்ளது.
மகிந்திரா அண்டு மகிந்திராமகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், சென்ற நவம்பரில், 48,143 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட (40,722 வாகனங்கள்), 18 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டில், இந்நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை, 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 38,159 என்ற எண்ணிக்கையிலிருந்து, 46,755 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 46 சதவீதம் சரிவடைந்து, 2,563ல் இருந்து, 1,388 ஆக குறைந்துள்ளது.இந்தியா யமஹா மோட்டார்இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், சென்ற நவம்பர் மாதத்தில், 44,691 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட (39,162 வாகனங்கள்), 14 சதவீதம் அதிகமாகும்.இருப்பினும், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 33 சதவீதம் வளர்ச்சி கண்டு, 28,178 என்ற எண்ணிக்கையிலிருந்து, 37,347 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 10,984ல் இருந்து, 7,344 ஆக சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.டொயோட்டா கிர்லோஸ்கர்மதிப்பீட்டு மாதத்தில், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் வாகன விற்பனை, 26 சதவீதம் சரிவடைந்து, 10,352 ஆக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 13,956 ஆக அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)