தங்கம் விலை சவரனுக்கு ரூ.144  குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு ... இந்தியாவில் முதலீடு செய்ய அன்னிய நிறுவனங்கள் ஆர்வம் இந்தியாவில் முதலீடு செய்ய அன்னிய நிறுவனங்கள் ஆர்வம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மிருதுவான தோற்றம், மிரட்டும் செயல்திறன் சாங்யாங் ரெக்ஸ்டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2012
15:06

எஸ்யுவி தயாரிப்பில் பெயர் பெற்ற மஹிந்திரா இந்தியா, தென் கொரிய வாகன நிறுவனமான ஸாங்யாங்கை தன்னுடன் இணைத்து அந்நிறுவன பெயரிலேயே கொண்டு வந்துள்ள புதிய எஸ்யுவி ஸாங்யாங் ரெக்ஸ்டன் ஆகும். இந்த செக்மண்ட் மற்ற எஸ்யுவிக்களில் இருந்து சற்றே மாறுபட்ட வித்தியாசமான நளினமான தோற்றத்தில் இன்னும் பெரிய அளவில் அ‌‌‌தே நேரம் அவற்றைவிட சற்றே குறைந்த விலையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள ரெக்ஸ்டன் இந்திய பிரீமியம் கார்களை விரும்பும் வாடிக்கை யாளர்களை முழு திருப்தியடையச் செய்யும் என்பது நிச்சயம். இந்த உலகத்தரத்திலான எஸ்யுவியின் சென்னை ஷோரூம் விலை ரூ.18.08 லட்Œம் (ஆர் எக்ஸ்5) முதல் ரூ.20.12 லட்சம் (ஆர்எக்ஸ் 7 வகை) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெக்ஸ்டன்னில் சிறந்த தொழில் நுட்பம், அதிக செயல்திறன், நிறைந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உயர்தர பிரிமீயம் செகுசு அம்சங்களுடன் சிறந்து விளங்குகிறது.நன்கு நீண்ட, உயர்ந்த, அகலமான தோற்றத்தில் பெரிய அளவில் இருந்தாலும், ரெக்ஸ்டன்னின் முன்புறம் சற்றே சரிந்த பானட், மேல் நோக்கி உள்ள ஹெட்லாம்ப் மற்றும் முன்புறம் மடிக்கப்பட்ட கிரில் போன்றவை இதற்கு மென்மையான நளினமான தோற்றத்தைக் கொடுக்கிறது. எல் வடிவத்திலான பார்க்கிங் விளக்குகள் மற்றும் பிரொஜெக்டர் ஹெட்லாம்ப்கள், நல்ல ஸ்டைலான கருப்பு பிளாஸ்டிக் கிலாடிங் கொண்ட பம்பரும் அதன் இருபுறமும் உள்ள பாக்லாம்பும், எல்இடி டெயில் லாம்ப்களும், டர்ன் இன்டிகேட்டர்கள் கொண்ட ஸ்டைலான ஓஆர்விஎம்களும், 10 ஸ்போக் கொண்ட அலாய் சக்கரங்களும் இதன் வெளிப்புறத்தோற்றத்தை அழகுபடுத்துகிறது. இதன் கிரோம் கிரில் முன்புறம் உள்ளதும், ஸ்டெபின்லெஸ் ஸ்டீல் பெல்டிங் மற்றும் கிரோம் மோல்டிங் உள்ளதும் இதற்கு "ரிச்சான' ‌தோற்றத்தைக் கொடுக்கிறது.
ரெக்ஸ்டனின் மானுவல் டிரான்ஸ்மிஷன் (R-X5) என்ஜின் 2696 சிசி, 2.7 லிட்டர் டர்போ சார்ஜ்ட் ஆர்எக்ஸ் 270 XDi டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் (R-X7) ஆர்எக்ஸ் 270 XVT என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்லைன் 5 சிலிண்டர் DO-HC மோட்டர் மெர்சிடெஸ் தொழில் நுட்பத்தால் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனுடன் மெர்சிடிஸ் 5ஸ்பீட் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் கியர் கொண்டுள்ளது. இதன் என்ஜின்கள் 162 ‌Bhp பவரம் 340 மீட்டர்க்கும் மேன்வெல் டிரான்ஸ்மிஷனிலும் 184 Bhp பவரும் 402 மீட் டார்க்கும் ஆட்டோ டிரான்ஸ்மிஷனிலும் வழங்குகிறது. மேலும் ஆர்எக்ஸ் 5, லிட்டருக்கு 12.4 கிலோமீட்டர் மைலேஜும், ஆர்எக்ஸ் 7 லிட்டருக்கு 11.18 கிலோமீட்டர் மைலேஜும் தருகிறது. மற்றும் 10.92 விநாடியில் 100 கிலோமீட்டர் மணிக்கு என்ற வேகத்தை இது எட்டக் கூடியதாகும். இதன் என்ஜின் வேகமான ஹை-வே பயணித்திலும், ரிலாக்ஸ்டான நகரச்சாலைகளின் பயணித்திலும் நிறைவான செயல்திறனை வழங்குகிறது.
இதன் சஸ்பென்ஷன் முன்புறம் டபிள் விஷ்போனும் பின்புறம் ஸ்பிரிங் மற்றும் லைவ் ஏக்சலும் கொண்டுள்ளது. இதன் 235/78 R16 டியூப்லெஸ் டயர்கள் சாலையின் அதிர்வுகளை உள் வாங்கிக் கொண்டு மேடு பள்ளமுள்ள சாலைகளிலும் சுகமான பயணத்தை அளிக்கிறது.நன்கு பர்னிஷ் செய்யப்பட்ட ஏசி அறையின் சுகமான மெத்தென்ற சோபாவில் அமர்ந்திருப்பது போன்ற அனுபவத்தையே ரெக்ஸ்டரின் கேபின் உள் அமைப்பு வழங்குகிறது. பீஜ் மற்றும் கருப்பு நிறத்திலான டியூவல்டோன் டாஷ்போர்ட் எடுப்பான தோற்றத்தை அளிக்கிறது. எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் ஓட்டுனர் இருக்கை மூன்று அசைவுகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் பிரீசெட் முறையுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு இருக்கைகளுக்கு சீராக குளிர்காற்றை வழங்கும் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி இதன் மற்றொரு சிறப்பம் சமாகும். இதன் இருக்கைகள் லெதரினால் ஆனதும் மட்டுமின்றி இதன் குஷன் அதிக மிருதுவாகவும் உள்ளதால் சுகமான அனுபவத்தை அளிக்கிறது.நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றை ரெக்ஸ்டரின் கேபினில் பார்க்க முடிகிறது. டச் ஸ்க்ரீன் வசதியுடன் கூடிய இன்போடைன்மென்ட் சிஸ்டம் நேவிகேஷனுடன் உள்ளது, இதன் ஸ்பீட் சென்சிடீவ் பவர் ஸ்டியரிங் ஓட்டுனரின் வேலையை சுலபமாக்குகிறது. ஒரே ஒரு லீவரை அசைப்பதின் மூலம் குரூயிஸ் கண்ட்ரோல் செட் செய்ய ஓட்டுனர் ரிலாக்ஸ்டாக பாட்டு கேட்டுக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் பயணிக்கலாம். இதனுள் நிறைய ஸ்டோரே ஸ்@பஸ் உள்ளது. @மற்கூரையில் மூக்குக் கண்ணாடி வைப்பதற்கான ஹோல்டர், கை வைக்கும் இடத்தில் பொருட்கள் வைப்பதற்கும், கப் ஹோல்டருக்கான வசதியும் உள்ளது. மேலும் கதவுகளிலும், தரையின் அடிப்பகுதிகளிலும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிகரெட் லைட்டர், ஆஷ்ட்ரே, மூன்று அடுக்குகளிலும் ரீடிங்லாம்ப், கோட் ஹிக், க்ளவ் பாக்சில் லைட் என்று பல சிறு சிறு வசதிகள் ரெக்ஸ்டரில் பயணம் செய்வதையே ”கமான அனுபவமாக்குகிறது. ரெக்ஸ்டரின் பாதுகாப்பு அம்சங்கள் என்று பார்க்கையில் இபிடியுடன் கூடிய ஏபிஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு ஏர்போக் டிராக்ஷன் கண்ட்ரோல், இஎஸ்பி என்ற எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோக்ராம், கொலிஷன் அவாய்டன்ஸ் சிஸ்டம் மற்றும் என்ஜின் இம்மொபலைசர் இதில் உள்ளது. மேலும் இதன் பெரிய ஹேலோஜன் ஹெட்லேம்ப் இரவு நேர பயணத்தை பாதுகாக்குகிறது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வண்டியின் பாதுகாப்பிற்கும் பயணத்திற்கும் உதவுகிறது. சாடின் ஒயிட். மூன்டஸ்ட் சில்வர். வேல்கெனோ பிளாக் மற்றும் ஓபுலண்ட் பர்பிள் என்று நான்கு நிறங்களில் ரெக்ஸ்டன் வருகிறது. உலகத்தரமான வசதிகளும். நவீன தொழில் நுட்பத்துடனான சிறந்த செயல்திறனும், இந்திய சாலைகளுக்கு ஏற்ற உறுதியும் அதே நேரம் இந்திய மக்களுக்கு ஏற்ற விலையில் சாலைகளில் வீறு நடைபோட வந்துள்ளது. மஹந்திராவின் சாங்யாங் ரெக்ஸ்டன்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)