பதிவு செய்த நாள்
05 டிச2012
16:37
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், இந்தியாவில், " ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் அண்டு ஸ்கூட்டர்ஸ் இந்தியா' என்ற பெயரில் செயல்படுகிறது. இருசக்கர வாகன விற்பனை சந்தையில், என்ட்ரி லெவல் பைக் என்ற பிரிவில், இந்த நிறுவனம் தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இதையொட்டி, சில மாதங்களுக்கு முன்பு, "டிரீம் யுகா 110' என்ற பைக்கை, இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த பைக், கிராமப்பகுதிகள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களை குறி வைத்து, விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், நகரப்பகுதிகளுக்கான, "சிபி டிவிஸ்டர் 110' பைக்கை, இந்த நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. தற்போது, வெள்ளை மற்றும் கிரே வண்ணங்களில், "சிபி டிவிஸ்டர் 110' பைக், விற்பனைக்கு வந்துள்ளது. எனினும், இந்த பைக்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில், இந்த பைக்கின் ஆன்ரோடு விலை, ரூ.53,729ல் துவங்கி, ரூ.60,430ல் முடிவதாக, "சிபி டிவிஸ்டர் 110' பைக்குக்காக, இந்நிறுவன இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஹைஎண்டு மாடல், டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் கிடைக்கிறது. ஒரு லிட்டருக்கு, 60 கி.மீ., மைலேஜ் தரும் என்று, நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|