பதிவு செய்த நாள்
10 டிச2012
14:25

சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் தன் ஆஷா மொபைல் போன் வரிசையில்ஆஷா 205 மற்றும் 206 போன்களை அறிவித்து அறிமுகம் செய்தது. ஆனால், அதே நேரத்தில், தன் இந்திய இணைய தளத்தில், நோக்கியா 114 என்ற மொ பைல் போனையும் அறிமுகப் படுத்தியுள்ளது. நோக்கியா 114, இரண்டு சிம்களில் இயங்குகிறது. போகிற போக்கில், பேஸ்புக் தளத்தினை அணுகி இயக்க, தனி கீ தரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 1.7 அங்குல அகலத்தில் வண்ணத்தில் உள்ளது. நோக்கியா பிரவுசர் இணைக்கப்பட்டுள்ளது. புளுடூத் 2.1, ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள், நெட்வொர்க் இணைப்பினைத் தருகின்றன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் உள் நினைவகம் 16 எம்பி. இதன் பேட்டரி 1020 mAh திறன் கொண்டதாக உள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இதில் இயக்கலாம். டிக்ஷனரி, டிஜிட்டல் கடிகாரம், ரெகார்டர், கால்குலேட்டர் போன்ற தனி நபர் விரும்பும் வசதிகள் பல இதில் தரப்பட்டுள்ளன. 0.3 எம்பி திறனில் இயங்கும் கேமராவும் இதில் உள்ளது.இதன் விலை குறித்து கேட்டபோது, விரைவில் அறிவிக்கப்படும் என நோக்கியா நிறுவன விற்பனைப் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|