தேங்காய் கொள்முதல் விலை உயர்வு : தென்னை விவசாயிகள் மகிழ்ச்சிதேங்காய் கொள்முதல் விலை உயர்வு : தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி ... நவம்பர் மாதத்தில் ஏற்றமதி 4.17 சதவீதமாக சரிவு நவம்பர் மாதத்தில் ஏற்றமதி 4.17 சதவீதமாக சரிவு ...
இந்தியாவில் ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2012
15:12

புதுடில்லி: ஐபாட், ஐ பேட் மற்றும் ஐபோன் பயன்படுத்துபவர்கள், இனி இந்தியாவில் இயங்கும் ஐட்யூன் ஸ்டோரிலிருந்து தாங்கள் விரும்பும் இசை மற்றும் திரைப்படக் கோப்புகளை, கட்டணமாக இந்திய ரூபாயைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இதுவரை வெளிநாடுகளில் இயங்கி வந்த ஐட்யூன் ஸ்டோர் இப்போது இந்தியாவில் இயங்குகிறது. இந்த ஸ்டோரில் இறக்கிப் பயன்படுத்த, ஏறத்தாழ 2 கோடி பாடல்கள் கிடைக்கின்றன. சென்ற வாரம், 55 நாடுகளில், ஆப்பிள் நிறுவனம் தன் ஐட்யூன் ஸ்டோரை மக்களுக்குத் திறந்துள்ளது.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஐட்யூன் ஸ்டோர், ஏற்கனவே 119 நாடுகளில் இயங்கி வருகிறது. திரை இசைப் பாடல்களை எளிதாக டவுண்லோட் செய்து கொண்டு, இயக்கி ரசிக்கலாம். ஒரு பாடல் கோப்பு டவுண்லோட் செய்திட ரூ.12 வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். வாடகைப் பணமாகச் செலுத்தி, திரைப்படங்களை ரசிக்கலாம். மேற்கு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட நிறுவனங்கள் (20 சென்சுரி பாக்ஸ், சோனி பிக்சர்ஸ், வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் போன்றவை)தயாரித்துள்ள படங்களுடன், இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களின் படங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன. சாதாரண வகை திரைப்படம் ரூ.290க்கும், அதே படம் ஹை டெபனிஷன் பதிப்பாக இருந்தால் ரூ. 490க்கும் பெறலாம். இவை வாடகைக்கும் கிடைக்கும்.

இந்தியாவில் ஏற்கனவே இயங்கி வரும் நோக்கியா மியூசிக் ஸ்டோர் மற்றும் ப்ளிப் கே ஆர்ட் நிறுவனத்தின் “ப்ளைட்” (Flyte) ஆகியவற்றுக்குப் போட்டியாக ஐட்யூன் இயங்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)