பதிவு செய்த நாள்
11 டிச2012
23:31

மும்பை :நிலுவையில் உள்ள 63 கோடி ரூபாய் சேவை வரி தொடர்பாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றை, கைப்பற்றி உள்ளதாக, மும்பை சேவை வரி ஆணையர் எஸ்.கே.சோலங்கி தெரிவித்தார்.இந்நிறுவனம், சேவை வரி துறைக்கு, 190 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அதில், 127 கோடி ரூபாய் பாக்கி தொடர்பாக, இருதரப்பிற்கும் இடையே பிரச்னை உள்ளது.இந்நிலையில், கிங்பிஷர் நிறுவன உயரதிகாரி ஒருவர், கூறும்போது, "கையகப்படுத்தப்பட்ட விமானம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது; அது, நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல' என்றார்.கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை, கடந்த அக்டோபரில், விமானிகளின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் முடங்கியது.பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட போதிலும், விமான நிலைய ஆணையத்தின் தடை காரணமாக, மீண்டும் விமான சேவையை துவக்க முடியாத நிலையில் கிங்பிஷர் சிக்கியுள்ளது.இதனிடையே, 22 கோடி ரூபாய் வாடகை பாக்கி தொடர்பாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஒதுக்கப்பட்ட பெரும்பான்மை இடத்தையும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் இழந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|