பதிவு செய்த நாள்
11 டிச2012
23:32

மும்பை நடப்பு 2012ம் ஆண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், நம்நாட்டு வங்கிகளில், டாலரில் மேற்கொண்ட டெபாசிட் இரு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வங்கிகளில், 1,014 கோடி டாலரை முதலீடு செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், 488 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், அதிக வருவாய் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டால், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட், குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.மேலும், இதே காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ரூபாய் அடிப்படையில் மேற்கொண்ட, வங்கி டெபாசிட், 1,161 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஐந்து மடங்கு அதிகம் என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|