பதிவு செய்த நாள்
11 டிச2012
23:32

புதுடில்லி: நடப்பாண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், ரயில்வே வருவாய், 78,868 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 66,150 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, இந்திய ரயில்வேயின் வருவாய், 19.23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், ஒட்டு மொத்த சரக்கு போக்குவரத்து வாயிலான ரயில்வே வருவாய், 24.14 சதவீதம் வளர்ச்சி கண்டு,43,891 கோடி ரூபாயிலிருந்து, 54,487 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.பயணிகள் வாயிலாக கிடைத்த வருவாய், 8.97 சதவீதம் அதிகரித்து, 18,742 கோடியிலிருந்து, 20,423 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், முன்பதிவு செய்த பயணிகள் எண்ணிக்கை, 3.31 சதவீதம் உயர்ந்து, 552 கோடியிலிருந்து, 570 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், ரயில்வே கையாண்ட சரக்குகளின் அளவு, 4.07 சதவீதம் வளர்ச்சி கண்டு, 61.80 கோடி டன்னிலிருந்து, 64.71 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|