பதிவு செய்த நாள்
11 டிச2012
23:34

புதுடில்லி: நடப்பு 2012ம் ஆண்டின், ஜனவரி முதல் நவம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 58.99 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை (55.72 லட்சம் பேர்) விட, 5.9 சதவீதம் அதிகம் என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவிற்கு, 6.90 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், வருகை தந்தவர்களின் எண்ணிக்கையை (6.70 லட்சம்) விட, 3 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு மாதத்தில், சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த அன்னியச் செலாவணி வருவாய், 22.4 சதவீதம் வளர்ச்சிகண்டு, 7,941 கோடி ரூபாயிலிருந்து, 9,723 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மத்திய அரசு, அண்மையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், சுற்றுலாவிற்கு வரும் பயணிகளின் விசாவிற்கான நெறிமுறைகளை தளர்த்தியுள்ளது.இதனால், இனி வரும் மாதங்களில், இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2011ம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச அளவில், சுற்றுலா பயணிகளின் வரத்தில், இந்தியாவின் பங்களிப்பு, 0.64 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது.மத்திய சுற்றுலா அமைச்சகம், நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட கால இறுதியில், சர்வதேச சுற்றுலா பயணிகளின் வரத்தில், இந்தியாவின் பங்களிப்பை, 1 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், இந்த இலக்கு எட்டப்படும் என, சுற்றுலா அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|