பதிவு செய்த நாள்
11 டிச2012
23:36

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, 5.95 சதவீதம் குறைந்து, 18,920 கோடி டாலராக (10.40 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, வர்த்தக துறை செயலர் எஸ்.ஆர்.ராவ் தெரிவித்தார்.நறுமண பொருட்கள்இந்தியாவிலிருந்து, மருந்துப் பொருட்கள், ஜவுளி, மோட்டார் வாகனங்கள், நறுமண பொருட்கள், வேளாண் பொருட்கள், காபி, தேயிலை, பொறியியல் சாதனங்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், இயந்திரங்கள், தளவாடங்கள், கடல் உணவு பொருட்கள், ரயில் பெட்டிகள், பால் மற்றும் பால் பொருட்கள் போன்றவை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகத்திற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முக்கியச் சந்தைகளாக திகழ்கின்றன. பொருளாதார மந்த நிலைசர்வதேச பொருளாதார மந்த நிலையால், மேற்கண்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்தியாவின் ஏற்றுமதி, தொடர்ந்து ஏழு மாதங்களாக குறைந்துள்ளது.நடப்பாண்டின், நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,220 கோடி டாலராக (1.22 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,320 கோடி டாலர்/ 1.27 லட்சம் கோடி ரூபாய்) விட, 4.17 சதவீதம் குறைவாகும்.இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 6.35 சதவீதம் அதிகரித்து, 4,150 கோடி டாலராக (2.28 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை, 1,930 கோடி டாலர் (1.06 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.கணக்கீட்டு காலத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 16.7 சதவீதம் உயர்ந்து, 1,450 கோடி டாலராக (79,750 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இதர பொருட்கள் இறக்குமதி, 1.5 சதவீதம் அதிகரித்து, 2,700 கோடி டாலராக (1.48 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, 5.95 சதவீதம் குறைந்து, 18,920 கோடி டாலராக (10.40 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.வர்த்தக பற்றாக்குறைஇதே காலத்தில், இறக்குமதி, 1.58 சதவீதம் குறைந்து, 31,870 கோடி டாலராக (17.52 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி உயர்ந்துள்ளதால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 12,950 கோடி டாலர் (7.12 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.கச்சா எண்ணெய்கச்சா எண்ணெய் இறக்குமதி, 10.8 சதவீதம் உயர்ந்து, 9,930 கோடி டாலர் (5.46 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவிலிருந்து, 11 ஆயிரம் கோடி டாலராக (6.05 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.அதேசமயம், கச்சா எண்ணெய் அல்லாத இதர பொருட்கள் இறக்குமதி, 7 சதவீதம் குறைந்து, 20,860 கோடி டாலராக (11.47 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு, நடப்பு வார இறுதியில் வெளியிடப்படும் என, ராவ் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|