பதிவு செய்த நாள்
12 டிச2012
10:26

சிட்னி: அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொணடு, நவீன காலகட்டத்திற்கு தேவையான கம்ப்யூட்டர், ஐபோன், ஐபேடு போன்ற பொருட்களை தயாரித்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் சென்ற ஆண்டு கால் இறுதி வருமானம் கலிபோர்னிய மாகாண அரசின் கஜானா கையிருப்பை விட அதிகமாக இருந்தது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலர் ஸ்டீவ் ஜாப் கான்செர் நோய் காரணமாக காலமானார். ஆப்பிள் நிறுவனத்திருக்கு இவருடைய மரணம் மிக பெரிய இழப்பாக இருந்தது.
மேலும் அண்மை காலமாக சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவனகள் , ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக மொபைல் போன்கள் மற்றும் டேபிலேட் பீசிஎனப்படும் கையளவு கணினி ஆப்பிள் தரத்திற்கு நிகராகவும் அதே சமயத்தில் குறைந்த விலையில் கொடுக்கின்றனர். இவை மட்டும் இல்லாமல் ஆப்பிள் ஐபோன், ஐபேடு ஆகிய வற்றில் இணைய தளத்தில் இறுதி டவுன்லோட் செய்ய இயலாது. ஆனால் சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவனகள் விற்கும் மொபைல் மற்றும் டேபிலேட் பீசீகளில் எதை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளவும் , பயன் படுத்தும் வசதியும் உள்ளது. எனவே சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவன தயாரிப்பிற்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இது ஆப்பிள் நிறுவன பங்குகளை வெகுவாக பாதித்தது. அமெரிக்க $705ல் இருத்த ஆப்பிள் நிறுவன பங்குகள் வெகுவாக குறைய தொடங்கின. இதனை சரிகட்ட ஆப்பிள் நிறுவனம் 7 " ஐபேடுகளை அண்மையில் வெளியிட்டது . ஆனால் அந்த 7 " ஐபேடுகள் மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் ஆப்பிள் நிறுவன பங்குகள் அமெரிக்க $547 ஆக குறைந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்க $420 ஐ தொடும் என கணிக்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலுக்கு உத்தரவாதம் என்ற நிலை மாறி , அந்த முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|