பதிவு செய்த நாள்
12 டிச2012
15:53

தொடு திரையுடன் கூடிய, இரண்டு சிம்களில் இயங்கக் கூடிய சென்ஸ் 3 (Sense 3) என்ற மொபைல் போனை, அண்மையில் இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனுடன் 2 ஜிபி டேட்டா கார்ட், கூடுதல் விலையின்றி வழங்கப்படுகிறது. இதனுடைய பேட்டரி திறன் 1,500 mAh ஆக இருப்பதால், தொடர்ந்து 5 மணி நேரம் பேச முடிகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், மின்சக்தி 250 மணி நேரம் தங்குகிறது. இதனுடைய திரை 3.2 அங்குல அகலத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த போனின் சிறப்பம்சமாக, இதனை ரிமோட் கண்ட்ரோலில் இயக்கும் வசதியைக் கூறலாம். போன் பயன்படுத்துவோருக்கு இது ஓர் ஆப்ஷனாகத் தரப்படுகிறது. இதனை ஒரு ரகசிய எஸ்.எம்.எஸ். ஒன்றை ஓர் எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் மேற்கொள்ளலாம். அதன் மூலம் செய்திகளை அழிக்கலாம்; போன் முகவரிகளை அழிக்கலாம் மற்றும் போன் முழுவதும் பார்மட் செய்திடலாம்.
அழைப்பவர்களை குழுக்களாக அமைத்து இயக்குவது, தானாக அழைப்பு பதிவுகளை ஏற்படுத்துதல், மொபைல் ட்ரேக்கர், 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, இபுக் ரீடர், வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர், பதிவு வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, சவுண்ட் ரெகார்டர், அழைப்புகளைத் தானாக பதிவு செய்திடும் வசதி, பேட்டரி மேனேஜர் ஆகிய வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன. ஒரு வெப் கேமராவினை இணைத்து, அதிக நேரம் வீடியோ அழைப்பினை மேற்கொள்ளலாம். 1000 முகவரிகள், 400 குறுஞ்செய்திகளை பதிந்து வைக்கலாம். புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் WAP வசதிகள் கிடைக்கின்றன.
இதில் தரப்பட்டுள்ள லோமோ (LOMO) கேமரா அப்ளிகேஷன் மற்ற மொபைல் போன்களில் இல்லாத சிறப்பான ஒன்று என இன்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தரப்பட்டுள்ள பியானோ அப்ளிகேஷன் மூலம், போனை ஒரு பியானோ போல பயன்படுத்தலாம்.
பொன் மஞ்Œள், வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில், இந்த போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 3,450. இன்டெக்ஸ் நிறுவனத்தின் தனிப்பட்ட விற்பனை நிலையங்களாக இயங்கும், இன்டெக்ஸ் ஸ்குயர்களிலும், மற்ற போன்
விற்பனையாளர்களிடமும், இன்டெக்ஸ் நிறுவனத்தின் 15,000 விநியோகஸ்தர்களிடமும் இந்த போன் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் மற்றொரு போனை இன்டெக்ஸ் ஆரா (Intex Aura)என்ற பெயரில் இன்டெக்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. அனைத்து வயதினருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு, இந்த போன் உகந்ததாக வடிவமைக்கப் பட்டுள்ளது என இன்டெக்ஸ் அறிவித்துள்ளது.
இதுவும் இரண்டு சிம் இயக்கத்தினைக் கொண்டுள்ளது. 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 1,800 mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 5 மணி நேரம் பேசும் வசதியையும், 360 மணி நேரம் மின்சக்தியைக் கொள்ளும் திறனையும் கொண்டுள்ளது. பதிவு செய்யும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, A2DP இணைந்த புளுடூத், பெர்சனல் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களுடன் இணைத்து இயக்க யு.எஸ்.பி. போர்ட், வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர் ஆகியவை கிடைக்கின்றன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், இதன் மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். அட்ரஸ் புக் 500 முகவரிகள் வரை கொள்கிறது. மொபைல் ட்ரேக்கர் மற்றும் டார்ச் இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளை சப்போர்ட் செய்கிறது. சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனில் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 1,690 மட்டுமே.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|