பதிவு செய்த நாள்
12 டிச2012
16:29

2012ம் ஆண்டின் சிறந்த குடும்ப கார் விருது மாருதி எர்டிகாவிற்கு கிடைத்துள்ளது. பிரபல பிபிசி டாப்கியர் இந்தியா ஆட்டோமொபைல் இதழ் இந்த விருதை வழங்கியிருக்கிறது. இந்தியஆட்டோமொபைல் கூட்டமைப்பின்(சியாம்) தலைவர் சாண்டில்யாவிடம் இருந்து இந்த மதிப்பு மிக்க விருதை மாருதியின் எஞ்சினியரிங் பிரிவு இயக்குனர் சிவி.ராமன் பெற்றுக்கொண்டார். கடந்த ஏப்ரலில் விற்பனைக்கு வந்த எர்டிகா வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கார் மாடலாக மாறியிருக்கிறது. எர்டிகாவில் 93பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் புதிய 1.4 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது 2 3 2 என்ற இருக்கை வரிசை கொண்ட எர்டிகாவில் 7 பேர் பயணம் செய்யலாம். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.2 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20..7 கிமீ மைலைஜையும் தரும் என அராய் சான்றளித்துள்ளது. பெட்ரோல் மாடல் ரூ.5.89 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.7.30 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|