தொடர் சரிவில் தங்கம் விலைதொடர் சரிவில் தங்கம் விலை ... தாவர எண்ணெய் இறக்குமதி 7 லட்சம் டன்னாக குறைவு தாவர எண்ணெய் இறக்குமதி 7 லட்சம் டன்னாக குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சாலையில் சீறிப்பாயும் ராக்கெட் ஸ்கோடா ராபிட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2012
14:07

அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு முடிவடைந்து முதல் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது ஸ்கோடா ராபிட். "சி' செக்மென்ட் செடான் வகை கார்களில் ஒன்றான ஸ்கோடா ராபிட் கலையும் அறிவியல் தொழில்நுட்பமும் கைகோர்த்து வடிவமைத்தது போன்ற தோற்றத்தையும் ‌‌செயல்திறனையும் கொண்டுள்ளது. காரின் உட்புற இடவமைப்பும், ஓட்டுவதற்கு லாவகமான தொழில்நுட்ப அமைப்பும் இதன் சிறப்பம்சங்களாகும். ஸ்கோடா ராபிட் மூன்று மாடல்களாக ஆக்டிவ், ஆம்பீஷன் மற்றும் எலிகென்ஸ் என்று வருகிறது. மேலும் இம்மூன்று வகையும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களிலும் கிடைக்கிறது. ராபிட்டின் 1598 சிசி பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் இரண்டும் 105 BHP பவரை கொடுக்கிறது. 1.6 லிட்டர் மல்டி பாயின்ட் இன்ஜெக்ஷன் (MPI) பெட்ரோல் என்ஜின் 153 மீட் டார்க்கையும். 1.6 லிட்டர் டர்போ சார்ஜ்டு டைரக்ட் இன்ஜெக்ஷன் வித் காமன் ரெயில் (TDICR) டீசல் என்ஜின் 250 மீட் டார்க்கையும் கொடுக்கிறது. இந்த செக்மென்ட் கார்களில் இதுவே மிக சக்தி வாய்ந்த டீசல் என்ஜின் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதனால் ஹைவேக்களில் முன் செல்லும் வண்டிகள் நொடிப்பொழுதில் கடக்கப்படுவதுடன் மேலும் சில நொடிகளில் ரியர் வ்யூ மிர்ரரில் இருந்தும் காணாமல் போய்விடும் என்றால் மிகையல்ல.
ஸ்கோடா ராபிட் 6 ஸ்பீட் டிப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடனும், 5 ஸ்பீட் மானுவல் ட்ரான்ஸ்மிஷனுடனும் வருகிறது. ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன்
ஆம்பீஷன் மற்றும் எலிகென்ஸ் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது.
இதன் பிக் - அக் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 0-100 கிலேமீட்டர் வேகத்தை 12.4 விநாடியில் அடைகிறது. மேலும் இது அநாவசியமாக 170-185 கிலோ மீட்டர் மணிக்கு என்ற வேகத்தை தொடுகிறது. ராபிட்டின் வெளித்தோற்றம் ஸ்கோடா ஃபேபியா மற்றும் லாராவின் மிகச் சிறப்பான அம்சங்களை உள்ளடக்கி ஸ்மார்டாய், புதிதாய் பொலிவாய் தோற்றமளிக்கிறது. ஏரோடைனமிக் டிசைனில் உள்ள ஹேலோஜென் லைட்டும், முன்புறம் நடுமையத்தில் உள்ள க்ரிலில் உள்ள க்ரோம் பட்டை முன்புறம் முழுவதுமாக பரந்துள்ளதும், பாடி கலரில் உள்ள பம்பரும் அழகான தோற்றத்தை அளிக்கிறது. இதன் பக்கவாட்டு தோற்றம் வெண்டோவை ஞாபகப்படுத்தினாலும் இதன் டின்டர்ட் விண்டோ ஃப்ரேம், கூரையில் உள்ள ஆன்டென்னா மற்றும் 5 ஸ்போக் அலாய் வீல் போன்றவை இதற்கு வித்தியாசமான அழகை அளிக்கிறது.
ராபிட்டின் உட்புறம் மேல் தட்டு இந்திய மக்களின் ரசனைக்கேற்ப வசதியாகவும் சொகுசாகவும் இருக்கிறது. லெதர் கவரில் உள்ள ஸ்டியரில் வீல் க்ரோம் ஃபினிஷ் கொண்ட நான்கு ஸ்போக்குடன் விளங்குகிறது. ஹைட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜஸ்ட்மென்ட்டும் ஸ்டியரிங் வீலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நடுவில் உள்ள ட்ரிப் கம்ப்யூட்டர், டிஜிட்டல் ஃப்யூவல் மீட்டர், கடிகாரம், டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி மற்றும் ட்ரிப் மீட்டருடன் ஓட்டுனர் பக்கம் சற்றே நகர்த்தப்பட்டு உள்ளதும் ராபிட்டின் உட்புறத்தை மேலும் அழகாக்குகிறது.
ஸ்கோடா ராபிட்டில் பாதுகாப்பு அம்சங்களும் நிறைவாய் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏர்பேக்குகள், ஆண்ட்டிலாக் ப்ரேக்கிங் சிஸ்டம், முன்புற ஃபாக்லாம்ப், இபிடி ப்ரேக்கிங், என்ஜின் இம்மொபலைசர், ஹைஸ்டாப் எல்இடி சென்டர் ப்ரேக் லைட்ஸ் போன்றவைகள் உள்ளன.சொகுசு அம்சங்களாக அட்ஜஸ்டபிள் பவர் ஸ்டியரிங், அட்ஜஸ்டபிள் வெளிப்புற ரியர் வ்யூ மிர்ரர் உட்புறம் மடிக்கும் வசதியுடனும், சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்‌டோ, அட்ஜஸ்டபிள் முன்புற சீட்கள், நான்கு ஸ்பீக்கருடன் MP3 மற்றும் FM கொண்ட செக்யூரிட்டி கோட் கொண்ட மியூசிக் சிஸ்டம் போன்றவைகள் இருக்கின்றன.
மொத்தத்தில் ஸ்‌கோடா ராபிட் கவர்ச்சியான வெளித்தோற்றம், நல்ல இடவசதி, சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் "சி' செக்மண்ட் வாகனங்களில் சிறந்த போட்டியாக விலைக்கேற்ற மதிப்புடன் சாலைகளில் சீறிப்பாய வந்துள்ளது ஸ்கோடா ராபிட்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)