பதிவு செய்த நாள்
14 டிச2012
13:39
இந்தியாவில், புஷ்-பட்டன் ஸ்டார்ட் வசதியுடன் கூடிய கார் என்பது, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான, சொகுசு கார்களில் தான் இடம் பெற்று இருக்கும். எனினும், நிஸான் இந்தியா கார் நிறுவனம்,, மைக்ரா காரை அறிமுகப்படுத்திய போது, இந்த வசதியுடன் காரை விற்பனை செய்தது. இதன் பிறகு, ஹுண்டாய் ஐ20, ரெனால்டு பல்ஸ் உள்ளிட்ட நடுத்தர ரக கார்களிலும், இந்த வசதி இடம் பெற தொடங்கியது. அந்த வரிசையில், அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய செவர்லே செயில் யு- விஏ காரிலும், புஷ்-பட்டன் ஸ்டார்ட் வசதி இடம் பெற்றுள்ளது. இதுதவிர, கார் இன்வெர்ட்டர், கார் ரெப்ரிஜிரேட்டர், ரியர் ஹெட்ரெஸ்ட் எல்.சி.டி., ஸ்கிரீன், 2- டின் ஆடியோ சிஸ்டம், பனி விளக்குகள், ரியர் பார்க்கிங் சென்ஸார்ஸ், கியர் லிவர் லாக், கார் செக்யூரிட்டி சிஸ்டம், ரூப் ஸ்பாய்லர் உள்ளிட்ட பல வசதிகளும், இந்த காரில் இடம் பெற்றுள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட பெட்ரோல் கார், 1.3 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட டீசல் கார், என இரண்டு வகைகளிலும், செயில் யு-விஏ கார் கிடைக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|