பதிவு செய்த நாள்
17 டிச2012
23:35

புதுடில்லி :வாகனங்களுக்கான காப்பீட்டு காலத்தை, ஓராண்டிலிருந்து, இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்க, காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டீ.ஏ.,) திட்டமிட்டுள்ளது.இதனால், பொது காப்பீட்டு நிறுவனங்களின் வருவாய் உயரும் என்பதுடன், கார் உரிமையாளர்களுக்கு காப்பீட்டு செலவும், புதுப்பிப்பதற்கான அலைச்சலும் குறையும்.வர்த்தகம் மற்றும் தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கான, காப்பீட்டு கால அளவை, முதற்கட்டமாக, இரண்டு ஆண்டுகளுக்கும், பின்னர், இதை, ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.வாகனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையுடன், காப்பீட்டு வசதியையும் இணைக்க, மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது என, ஐ.ஆர்.டீ.ஏ., அதிகாரி தெரிவித்தார்.தற்போது, இழப்பீடு கோரப்படும் அளவிற்கும், காப்பீட்டு பாலிசிகள் புதுப்பிக்கப்படுவதற்குமான இடைவெளி அதிகம் உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கான காப்பீட்டை புதுப்பிப்பது, மிகவும் குறைவாகவே உள்ளது.காப்பீட்டு காலத்தை நீட்டித்து, வாகன தகுதி உள்ளிட்ட இதர சான்றிதழுடன் இணைக்கும் பட்சத்தில், ஒரே சமயத்தில் காப்பீட்டு வசதியை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|