பதிவு செய்த நாள்
17 டிச2012
23:39

புதுடில்லி: வீட்டில் இருந்தே வலைதளம் மூலம், சுலபமாக வீட்டு வசதி கடன் பெறும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,) அறிமுகப்படுத்த உள்ளது.இந்த திட்டம் அமலுக்கு வந்தால், வீட்டு வசதி கடன் பெற, வங்கிப் படிக்கட்டுகளில் பலமுறை ஏறி, இறங்கும் அலைச்சல் மட்டுமின்றி, பணம், நேரம் ஆகியவையும் மிச்சமாகும்.வீடு தேடி வரும்எஸ்.பீ.ஐ.,-ன் வலைதளத்தில், வீட்டு வசதி கடனுக்கான விண்ணப்பத்தை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். கடன் பெற தகுதியான ஆவணங்களை, வங்கியின் விற்பனை பிரதிநிதிகள் வாடிக்கையாளர் வீட்டிற்கே சென்று,பெற்றுக் கொள்வார்கள். வருவாய், அடையாள அட்டை, வசிப்பிட சான்று உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்போது, ஏற்படும் ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள, வல்லுனரின் ஆலோசனையை பெறும் வசதியும், வலைதளத்தில் இருக்கும்.மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளின் விலை விவரம், கட்டுமான நிறுவனங்களின் குடியிருப்பு திட்டங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.கடனுக்கான விண்ணப்பத்தின் போது, வாடிக்கையாளருக்கு பிரத்யேக குறியீடு வழங்கப்படும். இதன் மூலம், அவர் தமது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை, அவ்வப்போது, வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். கடன் விண்ணப்ப பரிசீலனை, நான்கு கட்டங்களாக நடைபெறும். வாடிக்கையாளரின் வருமான வரி கணக்கு எண் (பான் கார்டு), கடன் தகவல் அமைப்பு (சி.ஐ.பீ.,) தரும் வாடிக்கையாளரின் வங்கி கடன் விவரங்கள், கடன் தகுதி ஆவணங்கள், இடர்பாட்டு அம்சங்கள் ஆகியவை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆய்வின் முடிவில், கொள்கை அளவிலான கடன் ஒப்புதல் குறித்து, வாடிக்கையாளருக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும். இத்துடன், வீட்டு வசதி கடன் வழங்கும் வங்கி கிளைகளின் விவரமும் இடம்பெற்றிருக்கும். வாடிக்கையாளர், தமக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையை தேர்வு செய்து, அங்கு கடன் பெற்றுக் கொள்ளலாம் என, வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வட்டி குறைப்புவீட்டு வசதி கடன் துறையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக, அதிரடி வட்டி குறைப்பு செய்து வருகிறது.இதனால், இவ்வங்கியின் வீட்டு வசதி கடன், சென்ற செப்டம்பர் வரையிலான ஓராண்டில் 13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.08 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்படி, 95,947 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 30 லட்ச ரூபாய் வரையிலான கடனுக்கு 10 சதவீதமும், 30 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட கடனுக்கு 10.15 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது.இந்திய வீட்டு வசதி கடன் சந்தையில், எஸ்.பீ.ஐ.,-ன் பங்களிப்பு 26 சதவீதமாக உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|