பதிவு செய்த நாள்
17 டிச2012
23:43

தாண்டிக்குடி ;கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ஆரஞ்சு பழங்களுக்கு அதிக விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், காமனூர், கொடலங்காடு பகுதியில், ஆரஞ்சு தோட்டங்கள் அதிகளவில் உள்ளன.இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து, காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இதனால், ஆரஞ்சு காய்கள் சிறிய அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளன. அவற்றின் விளைச்சலும் குறைந்துள்ளது. இந்த நிலையிலும், கடந்தாண்டை விட, நடப்பாண்டு ஆரஞ்சுக்கு அதிக விலை கிடைத்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "சென்ற ஆண்டு ஒரு கிலோ ஆரஞ்சு, 15 ரூபாயிலிருந்து, 20 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, நாக்பூர் ஆரஞ்சு வரத்து அதிகம் உள்ள நிலையிலும், ஒரு கிலோ உள்ளூர் ஆரஞ்சு 25 ரூபாயிலிருந்து, 35 ரூபாய் வரை விற்பனையாகிறது. பறிக்கப்படும் பழங்கள் மதுரை, கேரளா, திருச்சி பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன' என, தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|