பதிவு செய்த நாள்
17 டிச2012
23:53

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான திங்கட்கிழமையன்று சுணக்கமாகவே இருந்தது. மேலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், உலோகம், மோட்டார் வாகனம், மின்சாரம், ஆரோக்ய பராமரிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 72.83 புள்ளிகள் சரிவடைந்து, 19,244.42 புள்ளிகளில் நிலைகொண்டது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், விப்ரோ, பீ.எச்.இ.எல்., உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், ஸ்டெர்லைட் இந்தியா, ஹிண்டால்கோ, மாருதி உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 21.70 புள்ளிகள் குறைந்து, 5,857.90 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|