பதிவு செய்த நாள்
18 டிச2012
13:52

அவிநாசி : சேவூரில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு வரத்து அதிகரித்திருந்தது.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு இந்த வாரம் 1,500 மூட்டைகள் வரத்தாக இருந்தன. இது, கடந்த வாரத்தைவிட 400 மூட்டை அதிகம். விலையிலும் உயர்வு காணப்பட்டது. ஆனால், பச்சை ரகத்தின் விலை குறைந்து விட்டது. இந்த வார ஏலத்தில், அனைத்து நிலக்கடலை (காய்ந்தது) ரகங்களின் விலை (குவிண்டாலுக்கு) வருமாறு: முதல் ரகம் ரூ.5,690 முதல் 5,820 வரை, இரண்டாம் ரகம் ரூ.5,300 முதல் 5,550 வரை, மூன்றாம் ரகம் ரூ.4,680 முதல் 4,980 வரை மற்றும் பச்சை ரகம் ரூ.3,100. ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) மகேந்திரசிங் கூறுகையில், ""வரத்து அதிகரிப்பால், விலையும் அதிகரித்துள்ளது. முதல் ரகம் குவிண்டாலுக்கு ரூ.180 வரை உயர்ந்தது. 210 விவசாயிகள், 12 வியாபாரிகள் பங்கேற்றனர்; ரூ.15 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|