பதிவு செய்த நாள்
20 டிச2012
00:05

புதுடில்லி:சென்ற நவம்பர் மாதத்தில், வலைதளம் வாயிலாக வேலை வாய்ப்புக்காக பதிவு செய்தோர் எண்ணிக்கை 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, நாட்டின் வர்த்தக நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்து வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என, மான்ஸ்டர் டாட் காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (இந்தியா/தென்கிழக்கு ஆசியா) சஞ்ஜய் மோடி தெரிவித்தார்.
மதிப்பீட்டு காலத்தில், ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 27 தொழில் துறைகளில், 17 துறைகளில் வலைதளத்தில் வேலை வேண்டி, பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பொறியியல்,கட்டுமானம், கல்வி, மோட்டார் வாகனம் உள்ளிட்ட துறைகளில், வேலை வேண்டி வலைதளத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், வலைதளத்தில் வேலைக்காக பதிவு செய்தோர் பட்டியலில், கொச்சி, 35 சதவீத பங்களிப்புடன் முதலிடத்திலும், ஜெய்ப்பூர், 27 சதவீத பங்களிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதையடுத்து, பெங்களூர் மற்றும் ஐதராபாத் நகரங்கள் தலா, 14 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|