பதிவு செய்த நாள்
20 டிச2012
00:11

கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவாக, சென்ற அக்டோபரில், "பிளேடு' உற்பத்தி, 28.1 சதவீதம் சரிவடைந்து, 48.53 கோடி என்ற எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் எண்ணிக்கை, சென்ற ஜூலை மாதத்தில், 74.39 கோடியாகவும், அக்டோபரில், 61.53 கோடியாகவும் இருந்தது.ஆண்கள் பலர், அதிநவீன "ரேசர்'களின் பயன்பாடிற்கு மாறியுள்ளதால், பிளேடு உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சி கண்டு வருவதாக, இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பேட்டரி மற்றும் மின்சார ரேசர்கள், பயன்படுத்தி விட்டு தூக்கி எரியக்கூடிய, உடனடி முகச்சவர நவீன ரேசர்கள் மற்றும் இதர முகச்சவர சாதனங்கள், மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன.இதனால், காலந்தொட்டு புழக்கத்தில் வந்த இருந்து வந்த பிளேடுகளுக்கான தேவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|