பதிவு செய்த நாள்
20 டிச2012
11:18
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில், வரத்து அதிகரித்து உள்ளதால், கிலோ ரூ.52க்கு விற்ற சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து ரூ.37க்கு விற்றது.
ஒட்டன்சத்திரத்தில் கடந்த சில வாரங்களாக, வரத்து குறைவு காரணமாக, சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. கிலோ அதிகபட்சமாக ரூ.52 வரை விற்றது. பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காயம் தருவிக்கப்பட்டு கிலோ ரூ.21 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் புதிதாக பறிக்கப்பட்ட சின்ன வெங்காயம் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரத் தொடங்கியது. வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் விலை இறங்குமுகமாக உள்ளது. வெங்காயத்தின் நேற்றைய குறைந்த பட்ச விலை ரூ.37 ஆக இருந்தது.
கமிஷன் கடை உரிமையாளர் செல்வம் கூறுகையில், ""ஒட்டன்சத்திரத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து உள்ளூர் வெங்காயம் அறுவடை செய்யப்படுகிறது. இதன்காரணமாக வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|