பதிவு செய்த நாள்
20 டிச2012
16:11

உற்பத்தி செலவு அதிகரிப்பு, அன்னிய செலாவணி பரிமாற்றத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு ஆகிய காரணங்களால், மாருதி சுசூகி நிறுவனம் உட்பட, பல்வேறு கார் நிறுவனங்கள், ஜனவரி, 1ம் தேதி முதல், கார்களின் விலையை உயர்த்த உள்ளன. இது குறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) மயாங்க் பரீக் கூறுகையில்,"மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை செய்யும், பல்வேறு மாடல் கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. மாடலுக்கு தகுந்தார் போல், விலை உயர்வு இருக்கும். எனினும், மிக அதிகபட்சமாக, ரூ.20,000 வரை, விலை உயர்வு இருக்கும். அன்னிய செலாவணி பரிமாற்றத்தில் காணப்படும், ஏற்றத்தாழ்வு தான், விலை உயர்வுக்கு காரணம்,'' என்றார். மாருதி சுசூகி நிறுவனம், "மாருதி800' மாடல் காரில் இருந்து, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, விற்பனை செய்யப்படும் "கிஸாஷி' வரை, பல்வேறு மாடல் கார்களை, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் கார்களின், எக்ஸ்ஷோரூம், டில்லி, விலை ரூ.2.09 லட்சத்தில் இருந்து, ரூ.17.52 லட்சம் வரை உள்ளது. இதேபோல டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும், ஜனவரி, 1ம் தேதி முதல், தங்களது மாடல் கார்களின் விலையில், 1 முதல் 2 சதவீதம் வரை, உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம், "எதியோஸ் லிவா' முதல், வெளி
நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும், "லேண்ட் குரூஸர்' வரை, பல மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களின் எக்ஸ்ஷோரூம், டில்லி, விலை, ரூ.4.44 லட்சத்தில் இருந்து, ரூ.99.27 லட்சம் வரை உள்ளது. மாருதி,டொயோட்டா நிறுவனங்களை தொடர்ந்து, ஹோண்டா கார்ஸ் நிறுவனமும், வோக்ஸ்வாகன் நிறுவனமும், கார்களின் விலையை உயர்த்தும் திட்டம் உள்ளது என்று தெரிவித்துள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விலை, 1 சதவீதத்திலிருந்து, 3 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது என, அந்நிறுவனத்தின், துணை தலைவர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|