பதிவு செய்த நாள்
21 டிச2012
00:19

மும்பை:வரும் 2016ம் ஆண்டில், "ஸ்மார்ட் "டிவி' உற்பத்தி, 19.80 கோடியாக அதிகரிக்கும் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.துல்லியமான காட்சியமைப்புடன், இணையதளம் உள்ளிட்ட கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து வசதிகளையும் கொண்டதாக, "ஸ்மார்ட்"டிவி' விளங்குகிறது.சர்வதேச பொருளாதார மந்த நிலை, நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைவு போன்ற காரணங்களால், "டிவி' விற்பனை குறைந்துள்ளது. இந்நிலையிலும்,
"ஸ்மார்ட் "டிவி'களுக்கான தேவை அதிகரித்துள்ளது.இதையடுத்து, "டிவி' தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, பல முன்னணி நிறுவனங்கள், "ஸ்மார்ட் "டிவி'க்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளன.நடப்பாண்டில், சர்வதேச அளவில்,"ஸ்மார்ட் "டிவி' உற்பத்தி, 6.90 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதர "டிவி'களை காட்டிலும், "ஸ்மார்ட் "டிவி'க்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், வரும் 2013ம் ஆண்டில், இதன் உற்பத்தி, 10.80 கோடியாகவும், 2016ம் ஆண்டில், 19.80 கோடியாகவும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|