மின் தடையால் கைத்தறி தொழிலுக்கு ரூ.5 கோடி இழப்புமின் தடையால் கைத்தறி தொழிலுக்கு ரூ.5 கோடி இழப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு ...
துத்தநாக தகடு பால் 'கேன்' உற்பத்திக்கு மூடுவிழா:அடுத்த அடி கொடுத்தது 'பிளாஸ்டிக்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2012
00:25

மதுரை:'பால் கேன்' உற்பத்தியிலும் 'பிளாஸ்டிக்' நுழைந்ததால், மதுரையின் பாரம்பரிய துத்தநாகத் தகடு 'கேன்' உற்பத்தி, மூடுவிழா கண்டுள்ளது.வீட்டுக்கு ஒரு மாடு இருந்த காலகட்டத்தில், பால் விற்பனையில் ஈடுபட்ட பெண்கள், குடும்பச் செலவை சமாளித்து வந்தனர். அவர்கள் பால் எடுத்துச் செல்ல வசதியாக, துத்தநாகத் தகட்டில் தயாரிக்கப்பட்ட 'கேன்'களை பயன்படுத்தினர்.விற்பனை குறைவு:பாக்கெட் பால் அறிமுகம் ஆன பின், நேரடி பால் விற்பனை குறையத் துவங்கியது. சிறுநகரங்களில் மட்டுமே, கேன்கள் மூலம் பால் விற்பனை நடந்து வருகிறது. பல தொழில்களை சீரழித்த பிளாஸ்டிக், தற்போது, 'பால் கேன்' உற்பத்தியையும் விடவில்லை. நவீன வரவாக, பிளாஸ்டிக் 'கேன்'கள் விற்பனைக்கு வந்துள்ளதால், பாரம்பரியமாய் பால் விற்பனைக்கு பயன்படுத்தி வந்த, துத்தநாகத் தகடு கேன்களின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.மதுரையில், இத்தொழிலை நம்பி இருந்த ஏராளமானோர், மாற்றுத் தொழிலை நாடியுள்ளனர். குடும்ப உறுப்பினர்களை கொண்ட மூன்று பட்டறைகள் மட்டுமே, வேறு வழியின்றி உற்பத்தி செய்து வருகின்றன. துத்தநாகத் தகடு, ஒரு கிலோ 50 ரூபாய். ஐந்து லிட்டர் கேன் தயாரிக்க, ஒன்றரை கிலோ தகடு, பயன்படுத்தப் படுகிறது.ஐந்து முதல், 50 லிட்டர் வரையிலான கேன்கள், கை வேலைப்பாட்டில் தயாராகின்றன. 10 கிலோவுக்கு ஒரு கிலோ தகடு, கழிவாகிறது.
இரும்பு:கேன்களை தூக்குவதற்கு 'காது', அடிப்பகுதியை பாதுகாக்கும் பட்டைக்கு இரும்பு பயன்படுத்துகின்றனர். அதற்கான இரும்பு, கிலோ 40 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.உற்பத்தி முடிந்த பின், 5 லிட்டர் கேனுக்கு, 80 ரூபாயும், 10 லிட்டருக்கு, 120 ரூபாயும் என, லிட்டருக்கு ஏற்ப விலை வைக்கப்படுகிறது. இந்த வகை கேன்கள், எடை குறைவானவை என்பதால், தூக்கிச் செல்ல எளியவை.
கவர்ச்சியான தோற்றம்:இதனால், பால் வியாபாரிகள், துத்தநாகத் தகடு கேன்களை விரும்பினர். தமிழகம் முழுவதும் விற்பனை அமோகமாய் இருந்தது. பிளாஸ்டிக் கேன்களின் கவர்ச்சியான தோற்றம், துத்தநாகத் தகடு கேன்களின் விற்பனைக்கு விடை கொடுத்தது.
அத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக் அப்துல்லா கூறியதாவது: 10 வயதில், கேன் உற்பத்தி தொழிலுக்கு வந்தேன். தேவை அதிகம் இருந்ததால், உற்பத்தி செய்ய முடியாத அளவிற்கு 'ஆர்டர்' இருந்தது. கேன் தயாரிக்கும் பட்டறைகள் ஏராளமாய் இருந்தன. பாக்கெட் பால் வந்த பின், பல பட்டறைகள் மூடப்பட்டன.
எனக்கு வேறு தொழில் தெரியாது என்பதால், நானே பட்டறை அமைத்து, கூலிக்கு உற்பத்தி செய்து வருகிறேன். நாள் ஒன்றுக்கு, 10 கேன்கள் தயாரிக்கலாம். ஆனால், அவற்றை விற்பது கடினம். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் கூலி கிடைக்கிறது. பிளாஸ்டிக் கேன்கள் வந்ததால், 'ஆர்டர்' வருவது மிகவும் குறைந்து உள்ளது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)