பதிவு செய்த நாள்
26 டிச2012
00:35

புதுடில்லி:இந்தியாவிற்கு வரும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விருந்தோம்பல் துறை சிறப்பாக வளர்ச்சிகண்டு வருகிறது. இதனால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவில் ஓட்டல் வர்த்தகத்தில் ஈடுபடத் திட்டமிட்டு உள்ளன.பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில், இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில், தரமான மற்றும் குறைந்த செலவில் மருத்துவச் சேவை கிடைப்பதால், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு வருகை தரும் மருத்துவ சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
நட்சத்திர ஓட்டல்கள்:இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், தங்குவதற்காக, நாட்டின் முக்கிய நகரங்களில், நட்சத்திர ஓட்டல் கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு நிறு வனங்களும், இந்திய நிறுவனங்களின் கூட்டுடன், இந்திய ஓட்டல் துறையில் களம் இறங்கி வருகின்றன. விருந் தோம்பல் துறையில் முன்னணியில் உள்ள, இண்டர்கான்டினென்டல் ஓட்டல்ஸ் குழுமம், வரும், 2020ம் ஆண்டிற் குள், இந்தியாவில், 150 புதிய ஓட்டல்களை திறக்க திட்டமிட்டு உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்உட் ஓட்டல்ஸ் அண்டு ரிசார்ட்ஸ் நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், 100 ஓட்டல்களை நிர்வகிக்கவும், வின்ந்த்ஹம் ஓட்டல் குழுமம், 35 ஓட்டல்களை திறக்கவும் முடிவு செய்துள்ளன.
லலித் சூரி ஹாஸ்பிடபிலிட்டி நிறுவனம், வரும், 2017ம் ஆண்டிற்குள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள, அதன் சொகுசு மற்றும் நடுத்தர ஓட்டல்களின் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக, 2,200 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டு உள்ளது.
லீலா குழுமம், ஜெய்ப்பூர், ஆக்ரா, அஷ்டமுடி (கேரளா) மற்றும் பெங்களூரு நகரங்களில், ஓட்டல்களை கட்டி வருகிறது.இதுகுறித்து, இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டரான்ட் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: சர்வ தேச பொருளாதார மந்த நிலையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சர்வதேச அளவில் விருந்தோம்பல் துறை பாதிக்கப்பட்டது. தற்போது, பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளதால், அடுத்த மூன்று ஆண்டு களில், இத்துறை சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியாவில், அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதன் மூலம், விருந்தோம்பல் துறையில், அதிக அளவில் முதலீடு மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சுற்றுலா பயணிகள் :நடப்பாண்டின், ஜனவரி முதல் நவம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 58.99 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில் வந்த பயணிகளை (55.72 லட்சம் பேர்) விட, 5.9 சதவீதம் அதிகமாகும்.கணக்கீட்டு காலத்தில், சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த அன்னியச் செலாவணி வருவாய், 22.1 சதவீதம் வளர்ச்சிகண்டு, 68,721 கோடி ரூபாயிலிருந்து, 83,938 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற, 2011ம் ஆண்டில், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 85 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|