பதிவு செய்த நாள்
26 டிச2012
15:17

உலகளவில், வாகன டயர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள, மிச்செலின் நிறுவனம், தென் இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் கோவையில், 'டயர்பிளஸ்'' என்ற பெயரில், இரண்டு சர்வீஸ் சென்டர்களை துவக்கியுள்ளது. சென்னையில், 'மஹிந்திரா கார் கேர் சென்டர்' என்ற பெயரிலும், கோவையில், ''டயர் கேர்'' என்ற பெயரிலும், துவக்கப்பட்டுள்ளது. இங்கு வாகன டயர்களுக்கான அனைத்து வித சர்வீஸ்களும் மேற்கொள்ளப்படும். சென்னையில், 2,100 சதுரடி பரப்பளவிலும், கோவையில், 3,000 சதுரடி பரப்பளவிலும், சர்வீஸ் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, மிச்செலின் இந்தியா நிறுவன மேலாளர் பி.குமார் கூறுகையில்,''தமிழகத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல, தொழில் துறையிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. இதன் காரணமாக, கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கார்களுக்கு தேவையான சர்வீஸ் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே தான், தமிழகத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்,'' என்றார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|