பதிவு செய்த நாள்
26 டிச2012
16:52

மும்பை : வாரத்தின் மூன்றாவது நாளில் ஏற்றுத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடனேயே முடிந்தன. வர்த்தகநேர முடிவின்போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 162.37 புள்ளிகள் உயர்ந்து 19,417.46 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 49.85 புள்ளிகள் உயர்ந்து 5,905.60 எனும் அளவிலும் முடிந்தது. ஆசியா மற்றும் உலகளவில் பங்குசந்தையில் காணப்படும் ஏற்றம் மற்றும் ஏற்றுமதிக்காக மத்திய அரசு அளித்துள்ள 2சதவீத மானியம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்ததாக பங்குசந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய பங்குவர்த்தகத்தில் எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் விலையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலையும் நல்ல ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|