பதிவு செய்த நாள்
27 டிச2012
00:06

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் (ஆர்.சி.எப்.,) நிறுவனத்தில், மத்திய அரசின் 12.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, நேற்று ஒப்புதல் அளித்தது.இதனை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆர்.சி.எப்., நிறுவனத்தில், மத்திய அரசு, 92.5 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. இதன் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம், 551.69 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தின், பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு, 360 கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்பார்க்கப் படுகிறது.தற்போது, மும்பை பங்குச் சந்தையில், ஆர்.சி.எப்., நிறுவன பங்கு, 57 ரூபாய் என்ற அளவில் கைமாறிக் கொண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, 10 பொதுத்துறை நிறுவனங்களில், 5 - 12.5 சதவீத பங்குகளை விற்று, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், இதுவரை 6,900 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.அடுத்து, என்.டி.பி.சி., ஆயில் இந்தியா, எம்.எம்.டி.சி., செயில், பீ.எச்.இ.எல்., ஆகிய நிறுவனங்களின் பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆயில் இந்தியாவின் பங்கு விற்பனை, வரும் 2013ம் ஆண்டு ஜனவரியிலும், இதை தொடர்ந்து, என்.டி.பி.சி., நிறுவனத்தின் பங்கு விற்பனை, பிப்ரவரியிலும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|