பதிவு செய்த நாள்
28 டிச2012
23:48
குன்னூர்: நடப்பு 2012ம் ஆண்டில், இது வரையிலுமாக, சர்வதேச கருப்பு தேயிலை உற்பத்தி, 2.27 சதவீதம் குறைந்து, 154 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 158 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, நடப்பாண்டில், இதன் உற்பத்தி, 4 கோடி கிலோ வீழ்ச்சி கண்டுள்ளது.நடப்பு ஆண்டில், நவம்பர் மாதம் வரையிலான காலத்தில், இந்தோனேஷியாவின் கருப்பு தேயிலை உற்பத்தி, 75 லட்சம் கிலோ குறைந்து, 4.88 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.இதே போன்று, மாலவி நாட்டின் கருப்பு தேயிலை உற்பத்தி, 48 லட்சம் கிலோ வீழ்ச்சி கண்டு, 3.78 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.பொருளாதார சுணக்க நிலையால், இங்கிலாந்து, கென்யாவின் தேயிலை இறக்குமதியை குறைத்துக் கொண்டுள்ளது. அதேசமயம், எகிப்து நாட்டில், கென்ய தேயிலைக்கான தேவை அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|