ரப்பர் உற்பத்தி 5.79 லட்சம் டன்னாக உயர்வு ரப்பர் உற்பத்தி 5.79 லட்சம் டன்னாக உயர்வு ... தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம் தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம் ...
நடப்பு 2012ம் ஆண்டில் தங்கத்தின் விலை12.54 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
23:51

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு 2012ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி வரையிலுமாக, தங்கத்தின் விலை, 12.54 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், வெள்ளியின் விலை, இதே காலத்தில், 14.38 சதவீதம் அதிகரித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார சுணக்க நிலையால், உலகளவில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய மதிப்புமிகு உலோகங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு அதிகரித்துள்ளது.மும்பை சந்தைநடப்பு டிசம்பர் மாதம் 24ம் தேதியன்று, 10 கிராம் தங்கத்தின் விலை, மும்பை சந்தையில், 30,600 ரூபாயாக அதிகரித்திருந்தது. இது, கடந்த 2011ம் ஆண்டு, டிசம்பர் 30ம் தேதியன்று, 27,190 ரூபாயாக இருந்தது. ஆக, ஓராண்டு காலத்தில், இதன் விலை, 12.54 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.வெள்ளி மீதான முதலீடும், சிறப்பான அளவில், அதிகரித்துள் ளது. தங்கத்தின் விலையை விட, வெள்ளியின் விலை, கணக்கீட்டு காலத்தில், 14.38 சதவீதம் உயர்ந்து உள்ளது.வெள்ளிஅதாவது, கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று, ஒரு கிலோ வெள்ளியின் விலை, 50,970 ரூபாயாக இருந்தது. இது, சென்ற 24ம் தேதியன்று, 58,300 ரூபாயாக அதிகரித்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரையில், ஆபரண பயன்பாட்டை விட, தொழில்துறைக்கான பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையிலும், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, நடப்பு 2012ம் ஆண்டில், சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. கணக்கீட்டு காலத்தில், சர்வதேச சந்தையில், வெள்ளியின் விலை, 8.40 சதவீதம் என்ற அளவிலும், தங்கத்தின் விலை, 6.33 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.கடந்த 5 -6 ஆண்டுகளாக, சர்வதேச சந்தையில், தங்கத்தை விட, வெள்ளியின் விலை, தொடர்ந்து அதிகரித்து உள்ளது. உலகளவில், உற்பத்தியாகும், மொத்த வெள்ளியில், 65 சதவீதம் தொழில் துறையில் பயன்படுத்தப்படுவதாக ஆய்வு நிறுவனம் ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து மந்தமாகவே உள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு அரசு, செலவினங்களை குறைத்துள்ளதுடன், வரிகளை உயர்த்தியுள்ளது.இதனால், சர்வதேச அளவில், இதர முதலீடுகளை விட, தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்கள் மீது மேற்கொள்ளப்படும் முதலீடு அதிகரித்துள்ளது.வரும் புத்தாண்டில், அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் நிலையில், அந்நாட்டினர் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களின் மீது மேற்கொள்ளப்படும் முதலீடு குறைந்து, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது என்ற மதிப்பீடும் உள்ளது.இதையடுத்து, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, குறைய வாய்ப்புள்ளது என, பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.இருப்பினும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், உலகளவில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உயரக்கூடும் என்ற மதிப்பீடும் உள்ளது.சீனாநடப்பு 2012ம் ஆண்டில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 7.9 சதவீதமாகவும், வரும், 2013ம் ஆண்டில், 8.4 சதவீதம் என்ற அளவிலும் இருக்குமென, உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.அமெரிக்காவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சென்ற நவம்பர் மாதத்தில், முன்னேற்றம் கண்டுள்ளது. கட்டடங்களின் மதிப்புஇதையடுத்து, அமெரிக்காவில், ரியல் எஸ்டேட் துறை சூடுபிடித்து உள்ளது. இதனால், நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்பேபடுகிறது.ஒட்டு மொத்த அளவில், வரும் 2013ம் ஆண்டிலும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, உயர வாய்ப்பு உள்ளது என, பல ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)