பதிவு செய்த நாள்
29 டிச2012
14:13

இந்தியாவில், மல்டி பர்ப்பஸ் வைக்கிள் (எம்.பி.வி.,) பிரிவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே, ஆர்யா கிராஸ்ஓவர் காரை விற்பனை செய்து வருகிறது. நடப்பு ஆண்டில், ஏற்கனவே, ஜெனான் பிக்அப் டிரக், இன்டிகா இவி2, இன்டிகோ இ-சிஎஸ் விஎக்ஸ், ஆர்யா 4வீல் டிரைவ், மானஸா கிளப் கிளாஸ், சபாரி ஸ்ட்ரோம் உள்ளிட்ட கார்களை இந்த நிறுவனம், அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், டிசம்பர், 19ம் தேதி, 2 வீல் டிரைவ் வசதி கொண்ட, "ஆர்யா ப்யூர் எல்எக்ஸ்' கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9.95 லட்சம் (எக்ஸ் ஷோரூம், பெங்களூரு). இந்த காரில், 2.2 லிட்டர் டிகோர் டர்போ டீŒல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்டது. புகை மாசு கட்டுப்பாட்டு விதியான, பாரத் ஸ்டேஜ் 4 விதிகளுக்கு உட்பட்டது. இந்த காரில் ஒரே நேரத்தில், ஏழு பேர் பயணம் செய்ய முடியும். இரண்டாவது மற்றும் கடைசி வரிசை சீட்களை மடித்து, கூடுதல் இடவசதியை உருவாக்கி கொள்ள முடியும்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|