கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,975 கோடியாக அதிகரிப்பு கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,975 கோடியாக அதிகரிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
"நானோ' கார் விற்பனையில் விறுவிறுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2012
23:43

புதுடில்லி: டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மலிவு விலை "நானே' கார் விற்பனை, சூடுபிடித்துள்ளது. புதிய மாடல்கள், கவர்ச்சியான சலுகை திட்டங்களால், இது சாத்தியமாகியுள்ளது.ரத்தன் டாட்டாவின் கனவு திட்டமான ஒரு லட்ச ரூபாய் "நானோ' கார், கடந்த 2010ம் ஆண்டு அறிமுகமானது. பரபரப்பாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கார், தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது.வாகன கடன்இதனால், இதன் விற்பனை சரிவடைந்தது. கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம், 509 கார்கள் மட்டுமே விற்பனையாகின. இதையடுத்து, 60 ஆயிரம் கி.மீ., அல்லது நான்கு ஆண்டு கால உத்தரவாதம், குறைந்த முன் பணத்தில் வாகனக் கடன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டன. மேலும், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன், புதிய மாடல்கள் அறிமுகபடுத்தப்பட்டன. இத்துடன், புறநகர் பகுதிகளில் "நானோ' கார் விற்பனைக்கென, பிரத்யேக கடைகள் திறக்கப்பட்டன.மாத விற்பனைஇவற்றிற்கு நல்ல பலன் கிடைத்தது. கடந்த 2011ம் ஆண்டு, ஜனவரி - நவம்பர் மாதங்களில் விற்பனையான "நானோ' கார்களின் எண்ணிக்கை 63,318 ஆக இருந்தது. இது, நடப்பாண்டு, இதே காலத்தில் 18 சதவீதம் வளர்ச்சி கண்டு,74,545 ஆக அதிகரித்துஉள்ளது.கடந்த மார்ச் மாதம், மிக அதிகமாக, அதாவது, 10,475 "நானோ' கார்கள் விற்பனையாகிஉள்ளன.இருந்தபோதிலும், மதிப்பீட்டு காலத்தில், சராசரி மாத விற்பனை, 6,500 கார்கள் என்ற அளவிற்கே உள்ளது.புதிய உத்திடாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், மாதம் ஒன்றுக்கு, 20 ஆயிரம் "நானோ' கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. குஜராத்தில், சனந்த் மாவட்டத்தில் உள்ள "நானோ' தொழிற்சாலை, ஆண்டுக்கு, 2.50 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டது."நானோ' விற்பனை அடிப்படையில் மதிப்பிட்டால், இத்தொழிற்சாலையின் உற்பத்தி திறனில், 50 சதவீதத்திற்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.எனவே, வரும் 2013ம் ஆண்டு, "நானோ' கார் விற்பனையை அதிகரிக்க, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், மேலும் பல புதிய உத்திகளை கையாளும் என, தெரிகிறது.அவற்றில் ஒன்றாக, டீசலில் இயங்கும் "நானோ' காரின் அறிமுகம் இருக்கும் என்றும், அதற்கான பணிகளை டாட்டா மோட்டார்ஸ் துவக்கி விட்டதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது.முதலிடம்இந்தியாவில் கார் விற்பனையில், மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் "மாருதி 800' கார் விற்பனை, மாதம்ஒன்றுக்கு சராசரியாக, 2,000 ஆக உள்ளது. இதன் "ஆல்டோ' கார் விற்பனை, மாதம் சராசரியாக, 18,000 - 20,000 ஆக உள்ளது. ஹூண்டாய் நிறுவனம், மாதம் ஒன்றுக்கு சராசரியாக 12 ஆயிரம், "ஐ-10' கார்களை விற்பனை செய்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)