பதிவு செய்த நாள்
02 ஜன2013
00:23

புதுடில்லி:சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின், உற்பத்தி வளர்ச்சி, 1.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அக்டோபர் மாதத்தில், 6.6 சதவீதம் என்ற அளவிலும், முந்தைய 2011ம் ஆண்டு, நவம்பர் மாதம், 7.8 சதவீதம் என்ற அளவிலும், சிறப்பான அளவில் அதிகரித்து காணப்பட்டது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இயற்கை எரிவாயுமதிப்பீட்டு காலத்தில், நிலக்கரி, இயற்கை எரிவாயு, சிமென்ட் ஆகிய துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளது.
அதேசமயம், கச்சா எண்ணெய், உரம் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.முக்கிய எட்டு துறைகளின் கீழ், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நாட்டின், தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐ.ஐ.பி.,) கணக்கிடுவதில், இவற்றின் பங்களிப்பு, 37.90 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
கச்சா எண்ணெய்நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 3.5 சதவீதம் என்ற அளவில் குறைந்த வளர்ச்சியை கண்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 4.8 சதவீதமாக உயர்ந்திருந்தது.சென்ற நவம்பர் மாதத்தில், நிலக்கரி துறையின் உற்பத்தி, மைனஸ், 4.4 சதவீதம் என்ற அளவில், பின்னடைவை கண்டுள்ளது. இது, கடந்த, 2011ம் ஆண்டின், இதே மாதத்தில், 4.9 சதவீதம் என்ற அளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டிருந்தது.
கணக்கீட்டு காலத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி, மைனஸ், 5.7 சதவீதத்திலிருந்து, 0.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ், 10.1 சதவீதத்திலிருந்து, மைனஸ், 15.2 சதவீதமாக மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட, பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி, 11.2 சதவீதத்திலிருந்து, 6.6 சதவீதம் என்ற குறைந்த அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
மின்சாரம்:உர துறையின் உற்பத்தி, மைனஸ், 6.7 சதவீதத்திலிருந்து, 5 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. உருக்கு துறையின் உற்பத்தி, 10.5 சதவீதத்திலிருந்து, 6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.மின்சார துறையின் உற்பத்தி, 14.4 சதவீதத்திலிருந்து, 2.3 சதவீதம் என்ற குறைந்த அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|