நிலக்கரி இறக்குமதி ரூ.7,000 கோடியை தாண்டும்நிலக்கரி இறக்குமதி ரூ.7,000 கோடியை தாண்டும் ... வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.52 குறைந்தது வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.52 குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீடு மூலம் ரூ.36,253 கோடி திரட்டல்:கடந்த 2012ம் ஆண்டில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2013
00:28

மும்பை:கடந்த 2012ம் ஆண்டில், பொதுப் பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்ட தொகை, 36,253 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டில், 17,480 கோடி ரூபாயாக இருந்தது என, பிரைம் டேட்டா பேஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு சந்தை நிலவரம்சென்ற ஆண்டின் பல மாதங்களில், பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், பல பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டன.
முந்தைய நிதியாண்டை விட, சென்ற நிதியாண்டில், பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்ட தொகை உயர்ந்து உள்ளது. இருப்பினும், இது, கடந்த 2010ம் ஆண்டில் திரட்டப்பட்ட தொகையை (99,022 கோடி ரூபாய்) விட, மிகவும் குறைவு என, பிரைம் டேட்டா பேஸ் நிறுவனத்தின் தலைவர் பிரித்வி ஹால்டியா தெரிவித்தார்.சென்ற 2012ம் ஆண்டில், பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட மொத்த தொகையில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு, 55 சதவீதம் (19,679 கோடி ரூபாய்)ஆகும்.
பங்கு விற்பனை:கடந்த 2011ம் ஆண்டில், இந்நிறுவனங்கள் திரட்டிய தொகை, 4,578 கோடி ரூபாய் அளவிற்கே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி', சென்ற ஆண்டு, பங்குச் சந்தைகள் வாயிலாக மேற்கொள்ளும் வகையில், கோரிக்கை அடிப்படையிலான பங்கு விற்பனை (ஓ.எப்.எஸ்.,) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது.
இவ்வகையில், 23 பொதுப் பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கெனவே, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், அவற்றின் மொத்த பங்கு முதலீட்டில், குறைந்தபட்சம், குறிப்பிட்ட சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற விதியின் கீழ், இப்பங்கு வெளியீட்டை பல நிறுவனங்கள் மேற்கொண்டன.
இந்த புதிய முறையின் கீழ் ஏற்கெனவே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், பங்குகளின் சந்தை விலையை விட, சற்று குறைவான விலையில், பங்குகளை ஒதுக்கீடு செய்து சுலபமாக நிதி திரட்டிக் கொண்டன. இது, நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இருந்தது என, பிரைம் டேட்டா பேஸ் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு "செபி' அமைப்பு, ஐ.பி.பி., என்று சுருக்கமாக அழைக்கப்படும், நிதி நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்தது. இவ்வகையில், கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ் மற்றும் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரு நிறுவனங்கள், இப்பிரிவின் கீழ், 841 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன.அதேசமயம், சென்ற ஆண்டில், 25 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் (ஐ.பி.ஓ) வாயிலாக, 6,938 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன.
இவ்வகையில், இதற்கு முந்தைய 2011ம் ஆண்டில், 37 நிறுவனங்கள், 5,966 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன.மும்பை பங்குசந்தை:மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், மும்பை பங்குச் சந்தை (பீ.எஸ்.இ.,) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.,) ஆகியவற்றின் எஸ்.எம்.இ. எக்சேஞ்ச் வாயிலாக, 14 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 103 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
இவை தவிர, 11 புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 6,835 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டது. இப்புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, பார்தி இன்ப்ராடெல், 1,000 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டது.விண்ணப்பங்கள்:இப்பிரிவில், எம்.சி.எக்ஸ்., மற்றும் கேர் ஆகிய நிறுவனங்களும் நிதி திரட்டிக் கொண்டன.சென்ற ஆண்டில், பி.சி. ஜுவல்லர்ஸ், திரிபோவன்தாஸ் பீம்ஜி மற்றும் தாரா ஜுவல்ஸ் ஆகிய நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக நிதி திரட்டிக் கொண்டன.
புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, 25 நிறுவனங்களுள், எம்.சி.எக்ஸ்., நிறுவன பங்கு வெளியீட்டிற்கு மட்டுமே, பங்குகள் வேண்டி, 4.26 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன.19 நிறுவன பங்குகள் வேண்டி, தலா 10 ஆயிரம் முதலீட்டாளர்களே விண்ணப்பித்திருந்தனர் என, பிரைம் டேட்டா பேஸ் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)